தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73 லட்சம் பேர் பதிவு – முழு விவரம் வெளியீடு!

0
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73 லட்சம் பேர் பதிவு - முழு விவரம் வெளியீடு!
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73 லட்சம் பேர் பதிவு - முழு விவரம் வெளியீடு!
தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 73 லட்சம் பேர் பதிவு – முழு விவரம் வெளியீடு!

தமிழகத்தில் அரசு வேலைக்காக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 73 லட்சம் பேர் காத்திருப்பதாக வேலை வாய்ப்பு மற்றும் பதிவுத்துறை அறிவித்துள்ளது. மேலும் பதிவு செய்தவர்களின் விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

வேலைவாய்ப்பு பதிவு:

அரசு வேலை என்ற ஆசையுடன் பலர் காத்திருக்கும் நிலையில், ஒரு சிலர் அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வெளியிடப்படும் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்து, அதற்காக பல முயற்சிகளை செய்து படித்து வருகின்றனர். மேலும் ஆண்டுதோறும் போட்டித் தேர்வு மூலமாக ஏகப்பட்டவர்கள் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். ஆனால் ஒரு சிலர் பள்ளி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து வேலை வாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி வரை, வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்து காத்திருப்போர் குறித்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. அவ்வாறு பதிவு செய்தவர்கள் தங்களுடைய வேலைவாய்ப்பு பதிவை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிப்பித்தும் வருகின்றனர். அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள் குறித்த விவரங்களை வேலைவாய்ப்பு மற்றும் பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதில், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 23 லட்சத்து ஆயிரத்து 800 பேர், 19 முதல் 30 வயது வரை உள்ள பல தரப்பட்ட கல்லூரி மாணவர்கள் 29 லட்சத்து 88 ஆயிரத்து 1 பேர், 31 முதல் 45 வயது வரை அரசுப் பணிக்காக காத்திருப்போர் 18 லட்சத்து 68 ஆயிரத்து 931 பேர், 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 35 ஆயிரத்து 190 பேர், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 590 பேர் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை நீட்டிப்பு – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

மேலும் மாற்றுத்திறனாளிகள் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 72 ஆயிரத்து 983 பேரும், பெண்கள் 37 ஆயிரத்து 843 உள்பட 1 லட்சத்து 10 ஆயிரத்து 826 பேரும், பார்வையற்ற ஆண்கள் 12 ஆயிரத்து 47 பேரும், பெண்கள் 5 ஆயிரத்து 449 பேர் உள்பட 17 ஆயிரத்து 496 பேரும் பதிவு செய்துள்ளனர்.அது மட்டுமில்லாமல், காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண்கள் 9 ஆயிரத்து 477 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 493 பேர் உள்பட 13 ஆயிரத்து 970 பேர், பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 49 ஆயிரத்து 704 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 60 ஆயிரத்து 938 பேர், என மொத்தம் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 பேர் பதிவு செய்து வேலைவாய்ப்பிற்காக காத்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!