WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கும் புதிய அம்சம்!
உலகின் முன்னணி தகவல் தொடர்பு சாதனமான WhatsApp தனது பயனர்களுக்கு ஆன்லைன் ஸ்டேட்டஸை மறைக்கும் திறனை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த அம்சம் விரைவில் WhatsApp பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
WhatsApp அப்டேட்
பயனர்களின் அனுபவத்தை மென்மையாகவும், சிறப்பாகவும் மாற்றுவதற்காக WhatsApp பல புதிய அம்சங்களை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது மெட்டா பயனர்களுக்கு ஆன்லைன் நிலையை மறைக்கும் திறனை வாட்ஸ்அப் செயல்படுத்த இருக்கிறது. இது குறித்து WABetaInfo அளித்துள்ள தகவலின் படி, ‘வாட்ஸ்அப் அதன் தனியுரிமை கொள்கைப்படி, பயனர்கள் ஆன்லைனில் இருக்கும்போது அதை யார் பார்க்கலாம் என்பதை தேர்வுசெய்யும் ஒரு அம்சத்தை உருவாக்கி இருக்கிறது. இந்த அம்சம் எதிர்கால அப்டேட்டில் கிடைக்கும்’ என்று தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த அம்சம் வெளியிடப்பட்டதும், பயனர்கள் தங்கள் ஆன்லைன் நிலையை யார் பார்க்கலாம் என்பதை தேர்வு செய்ய முடியும். அந்த வகையில், ‘அனைவரும்’ மற்றும் ‘லாஸ்ட் சீன்’ என்ற இரண்டு புதிய விருப்பங்களை பயனர்கள் தேர்வு செய்யலாம். எடுத்துக்காட்டாக, “கடைசியாகப் பார்த்தது” என்பதைத் தேர்வுசெய்தால் “ஆன்லைனில்” என்றும் ‘கடைசியாகப் பார்த்தது போல’ என்பதைத் தேர்வுசெய்தால் நீங்கள் ஆன்லைனில் இருக்கும்போது உங்கள் கான்டெக்டில் இல்லாதவர்கள் பார்க்க முடியாது என்ற விருப்பங்கள் வாட்ஸ்அப்பில் கிடைக்கும் என WABetaInfo விளக்கம் அளித்துள்ளது.
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு – திருத்தம் மேற்கொள்ள கால அவகாசம்!
கடந்த ஆண்டு, இந்த மெசேஜிங் செயலியானது லாஸ்ட் சீன் ஆப்ஷனை தானாக மறைத்து, சேட்டில் இல்லாத பயனர்களுடன் தொடர்பு கொள்ள செய்தது. இருப்பினும், நீங்கள் யாருடன் உரையாடுகிறீர்களோ அவர்கள் லாஸ்ட் சீன் மற்றும் ஆன்லைன் நிலையை நீங்கள் பார்க்க முடியும். ஆனால், இப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய அம்சம் பயனர்கள் ஆன்லைனில் இருக்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை மட்டும் லாஸ்ட் சீனை பார்க்க அனுமதிக்கும். இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு மற்றும் டெஸ்க்டாப் பீட்டாவிற்கான அப்டேட்டிலும் அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.