EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

0
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு - பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு - பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு – பேலன்ஸ் சரிபார்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள வட்டித் தொகையை சரிபார்க்கும் சில எளிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பேலன்ஸ் சரிபார்ப்பு

சுமார் 7 கோடி சந்தாதாரர்களை கொண்டுள்ள ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கடந்த 2021-22ம் நிதியாண்டிற்கான PF வட்டித் தொகையை இம்மாத இறுதியில் கொடுக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு இறுதியில் EPFO வட்டி விகிதம் சந்தாதாரர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜூலை 15 வரையுள்ள வட்டி இம்மாத இறுதிக்குள் EPFO கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் EPFO கணக்கில் வட்டித் தொகை வரவு வைக்கப்பட்டால் PF இருப்பை ஒரு சில வழிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

அதன்படி முதலாவதாக SMS மூலம் PF இருப்பை சரிபார்க்க, 7738299899 என்கிற எண்ணுக்கு EPFOHO UAN ENG என குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் உலகளாவிய கணக்கு எண் (UAN) மற்றும் EPFO போர்ட்டலில் EPFO உறுப்பினர்கள் தங்கள் கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். தொடர்ந்து வாடிக்கையாளர்கள் 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்தும் PF குறித்த தகவலை பெறலாம். இது தவிர, ஆன்லைன் முறையில் PF பேலன்ஸை சரிபார்க்க UMANG செயலியில் UAN மற்றும் OTPஐ உள்ளிட்டு தெரிந்து கொள்ளலாம்.

கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு மெரினாவில் போராட்டம்? போலீஸ் பாதுகாப்பு தீவிரம்!

EPFO இணையதளம் மூலம் PF இருப்பை சரிபார்க்க, முதலில் அதிகாரப்பூர்வ இணையத்தை திறக்கவும். தொடர்ந்து ‘Our Services’ என்ற ஆப்ஷனின் கீழ் உள்ள For Employees என்பதை தேர்வு செய்யவும். அடுத்ததாக Member Passbook என்பதைத் தேர்ந்தெடுத்து கடவுச்சொல் மற்றும் UANஐ உள்ளிட வேண்டும். இப்போது உங்கள் PF பங்களிப்பு மற்றும் முதலாளியின் பங்களிப்பு ஆகியவற்றுடன் வட்டி விவரங்களும் காண்பிக்கப்படும். இந்த சேவைகளை பயனர்கள் தங்களது PF கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மூலமாக பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!