EPFO கணக்கு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – PPO எண்ணை தெரிந்துகொள்வது எப்படி?

0
EPFO கணக்கு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - PPO எண்ணை தெரிந்துகொள்வது எப்படி?
EPFO கணக்கு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - PPO எண்ணை தெரிந்துகொள்வது எப்படி?
EPFO கணக்கு வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – PPO எண்ணை தெரிந்துகொள்வது எப்படி?

ஊழியரின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திட்டத்தில் இணைந்துள்ள உறுப்பினர்கள் அனைவரும் கட்டாயமாக PPO எண்ணை அறிந்திருக்க வேண்டும். தற்போது எப்படி PPO எண்ணை அறிந்துகொள்வது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PPO எண்

இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் அமைப்பான ஊழியரின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஊழியர்களுக்கு EPFO யுனிவர்சல் கணக்கு எண்ணை (UAN) கட்டாயமாக்கியுள்ளது. அதாவது, வருங்கால வைப்பு நிதி கணக்கு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் UAN எண் தனித்துவமாக உருவாக்கப்படுகிறது. மேலும், EPFO கணக்கு உறுப்பினர் ஓய்வு பெறும் போது 12 இலக்க பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (PPO) வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும், EPFO கணக்கு உறுப்பினர் ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்கும் போதும், ஆண்டு வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் போதும் பென்ஷன் பேமென்ட் ஆர்டர் (பிபிஓ) எண் மிகவும் அவசியமாகும். மேலும், ஒருவருக்கு பிபிஓ எண் இல்லையெனில் ஒரு வங்கி கிளையிலிருந்து மற்றொரு வங்கி கிளைக்கு PF கணக்கை மாற்றுவது மிகவும் சிக்கலாக இருக்கும். தற்போது எப்படி பிபிஓ எண்ணை சரிபார்ப்பது என்பதை பார்க்கலாம். முதலில், EPFOன் அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

நீங்கள் ரயில்வே பணியில் சேரும் கனவை கொண்டவரா? இதோ உங்களுக்கான வாய்ப்பு!

அதாவது, www.epfindia.gov.in என்கிற பக்கத்திற்கு சென்று ஆன்லைன் சேவை தாவலுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Pensioner’s portal என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு, Welcome to Pensioners Portal ல் உள்ள Know your PPO என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், வங்கி கணக்கு எண் மற்றும் PF எண்ணை பதிவு செய்து PPO எண்ணை தெரிந்துகொள்ளலாம். மேலும், ஓய்வூதிய தொகையை எவ்வாறு அறிந்துகொள்வது என்பதை பார்க்கலாம். முதலில், www.epfindia.gov.in என்கிற பக்கத்திற்கு சென்று Pensioner’s portal என்பதை கிளிக் செய்து Know Your Pension Status என்பதையும் கிளிக் செய்ய வேண்டும். இதன் பின்னர், அலுவலக ஐடி, PPO எண் என்பதை தேர்ந்தெடுத்து, Get Status என்பதைக் கிளிக் செய்துவிட்டால் ஓய்வூதிய தொகையை அறிந்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!