TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – சிலபஸ் & தேர்வுமுறை குறித்த விவரங்கள் இதோ!

0
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - சிலபஸ் & தேர்வுமுறை குறித்த விவரங்கள் இதோ!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு - சிலபஸ் & தேர்வுமுறை குறித்த விவரங்கள் இதோ!
TN TET தேர்வர்கள் கவனத்திற்கு – சிலபஸ் & தேர்வுமுறை குறித்த விவரங்கள் இதோ!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (TET) ஆன்லைன் விண்ணப்பபதிவுகள் முடிவடைந்த நிலையில் தற்போது தேர்வுக்கான பாடத்திட்டம் வெளியிடப்பட்டது . தற்போது இப்பதிவில் தேர்வு முறை, கல்வித்தகுதி, பாடத்திட்டம் குறித்த முழு விவரங்களையும் காண்போம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு:

தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நிலவும் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கைகள் எழுந்து வருகிறது. ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கான விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது.

Exams Daily Mobile App Download

இந்த தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாள் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்கும், இரண்டாம் தாள் பட்டப்படிப்பு ஆசிரியர் பயிற்சி படித்தவர்களுக்குரியது. இதில் முதல் தாளில் சைல்டு டெவலப்மெண்ட் 30, மொழிப்பாடம் – 30, மொழிப்பாடம் – 30 , கணக்கு 30, எண்வர்ல்மண்டல் ஸ்டடீஸ் 30 என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். மேலும் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பாடம் 6 – 11 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் முறைகளை உள்ளடக்கியது. மொழிப்பாடத்தில் சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்து கொள்ளும் திறன்கள் ஆகிய வினாக்கள் இடம்பெறும்.

அதே போல இரண்டாம் தாளில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் – 30, மொழிப்பாடம் – 30, ஆங்கிலம் – 30 சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு – 60 என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இந்த பாடத்திட்டத்தில் குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் 11 – 14 வயதுக்குட்பட்டவர்களுக்குரியது. மேலும் உங்களது பாடப்பிரிவில் கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல் போன்றவைகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். குறிப்பாக உளவியல் பாடங்களை படிக்கும் போது, புரிந்து படிப்பது நல்லது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!