SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வாட்ஸ்அப் மூலம் சேவைகள்!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வாட்ஸ்அப் மூலம் சேவைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வாட்ஸ்அப் மூலம் சேவைகள்!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – வாட்ஸ்அப் மூலம் சேவைகள்!

இந்தியாவின் முன்னணி வங்கி நிறுவனமான SBI, தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் அடிப்படையிலான வங்கி சேவைகளை வழங்குகிறது. இந்த சேவைகளை எப்படி பெற்றுக் கொள்வது என்பது குறித்த விவரங்கள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் சேவை

பாரத ஸ்டேட் வங்கி (SBI) தனது வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் அடிப்படையிலான வங்கி சேவையை வழங்க தொடங்கியுள்ளது. இப்போது, எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி தங்களது கணக்கு இருப்பை சரிபார்க்கலாம். மேலும் மினி அறிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள SBI அதிகாரப்பூர்வ ட்வீட்டில், ‘உங்கள் வங்கி இப்போது WhatsAppல் கிடைக்கிறது. இனி உங்கள் அக்கவுண்ட் பேலன்ஸ் குறித்து WhatsAppல் அறிந்துகொள்ளுங்கள் மற்றும் பயணத்தின் போது மினி ஸ்டேட்மெண்ட்டை பார்க்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்போது SBI வங்கியின் வாட்ஸ்அப் சேவையை பயன்படுத்த விரும்புபவர்கள் முதலில் இந்த சேவையில் தங்களை பதிவு செய்ய வேண்டும். அதற்காக WAREG என தட்டச்சு செய்து, பின்னர் உங்கள் கணக்கு எண்ணை இடைவெளியுடன் டைப் செய்து 7208933148 என்ற எண்ணிற்கு SMS அனுப்பவும். இப்போது உங்கள் SBI கணக்கில் பதிவு செய்யப்பட்ட அதே மொபைல் எண்ணிலிருந்து இந்த செய்தியை அனுப்பினால் மட்டுமே சேவைகளை பெற முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கிக்கு வெற்றிகரமாக பதிவு செய்த பிறகு, உங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு 90226 90226 என்ற எண்ணிலிருந்து செய்தி வரும்.

Post Office ல் மாதம் ரூ.2500 வரை வட்டியை அள்ளித்தரும் திட்டம் – முழு விவரம் இதோ!

இந்த எண்ணை சேமித்து வைத்துக் கொள்ளவும். அடுத்தபடியாக 90226 90226 என்ற எண்ணுக்கு ‘Hi SBI’ என்று மெஸேஜ் அனுப்பவும். அல்லது WhatAppல் நீங்கள் பெற்ற செய்திக்கு பதிலளிக்கவும். இப்போது, நீங்கள் செய்தி அனுப்பியதும், ‘அன்பார்ந்த வாடிக்கையாளரே, SBI Whatsapp வங்கி சேவைகளுக்கு வரவேற்கிறோம்! கீழே உள்ள விருப்பங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்கவும். கணக்கு இருப்பு, சிறு அறிக்கை, வாட்ஸ்அப் வங்கியில் இருந்து பதிவு நீக்கம்’ என்ற செய்தியை பெறுவீர்கள். இதில் உங்கள் வங்கி இருப்பு விவரங்களைப் பெற ‘1’ என்றும், உங்கள் மினி ஸ்டேட்மென்ட் விவரங்களைப் பெற ‘2’ என்றும் அனுப்ப வேண்டும்.

தொடர்ந்து எஸ்பிஐ வாட்ஸ்அப் வங்கியில் பதிவை நீக்க 3 என தட்டச்சு செய்ய வேண்டும். இப்போது SBI வங்கி தனது கிரெடிட் கார்டு பயனர்களுக்கு வாட்ஸ்அப் அடிப்படையிலான சேவைகளை இணையதளம் மூலம் வழங்குகிறது. அந்த வகையில் SBI கிரெடிட் கார்டுகளை கொண்ட வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கு மேலோட்டம், வெகுமதி புள்ளிகள், செலுத்தப்படாத இருப்பு மற்றும் பலவற்றை சரிபார்க்க இதைப் பயன்படுத்தலாம். இதற்காக கார்டுதாரர்கள் 9004022022 என்ற எண்ணுக்கு ‘OPTIN’ என்ற WhatsApp செய்தியை அனுப்ப வேண்டும். இது தவிர 08080945040 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் செய்தும் இந்த சேவையை பெறலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!