SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – WhatsApp மூலமான சேவையை தொடருவது எப்படி?

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - WhatsApp மூலமான சேவையை தொடருவது எப்படி?
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - WhatsApp மூலமான சேவையை தொடருவது எப்படி?
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – WhatsApp மூலமான சேவையை தொடருவது எப்படி?

SBI வங்கி தற்போது தான் WhatsApp மூலமான பண பரிவர்த்தன சேவைகளை துவங்கியுள்ளது. தற்போது எப்படி WhatsApp கணக்குடன் SBI வங்கி கணக்கை இணைப்பது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

SBI WhatsApp:

பாரத ஸ்டேட் வங்கி(SBI) அவ்வப்போது தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக கூடுதல் நலத்திட்ட உதவிகளை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனைகளை எளிமையாக WhatsApp மூலமான பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்த துவங்கியிருக்கிறது. ஏற்கனவே, HDFC வங்கி, ஆம் வங்கி, ஐசிஐசிஐ வங்கி மற்றும் IndusInd வங்கி உள்ளிட்ட பல வங்கிகள் WhatsApp மூலமான பணப்பரிவர்த்தனைகளை வழங்கி வருகிறது. ஆனால், SBI வங்கி தற்போது தான் WhatsApp மூலமான சேவைகளை துவங்கியிருக்கிறது.

மேலும், SBI வங்கி கிரெடிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சேவைகளை அறிமுகம் செய்திருக்கிறது. WhatsApp அக்கௌன்ட்டுடன் உங்களது SBI வங்கி கணக்கை இணைத்துவிட்டாலே WhatsApp மூலமான சேவைகளை செய்துகொள்ளலாம். அதாவது, வாட்ஸ்அப் மூலமாக வாடிக்கையாளர்களின் கணக்கு இருப்பு, வாட்ஸ்அப் வங்கியில் இருந்து பதிவு நீக்கம் செய்வது மற்றும் மினி அறிக்கை ஆகியவற்றை செய்து கொள்ளலாம். தற்போது எப்படி WhatsApp கணக்குடன் SBI வங்கி கணக்கை இணைப்பது என்பதை பார்க்கலாம்.

TN TRB தமிழ் தகுத்தேர்வில் தேர்ச்சி கட்டாயம் – புதிய அறிவிப்பு வெளியீடு!

Exams Daily Mobile App Download

முதலில், SBI வங்கியுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து 9004022022 என்கிற எண்ணிற்கு OPTIN என குறுஞ்செய்தி அனுப்பவும். இதற்கு பிறகு வங்கியின் அக்கௌன்ட் எண் என அனைத்து வங்கி விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். வங்கி விவரங்களை பதிவு செய்துவிட்டாலே WhatsApp மூலமான பணப்பரிவர்த்தனைகளை செய்துகொள்ளலாம். அது மட்டுமல்லாமல் 8080945040 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தும் பணப்பரிவர்த்தனைகளை செய்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!