SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD விகிதம் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD விகிதம் உயர்வு!SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - FD விகிதம் உயர்வு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – FD விகிதம் உயர்வு!

ரிசர்வ் வங்கி SBI வங்கியின் ரெப்போ விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து குறிப்பிட்ட தவணைகளுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதத்தையும் உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு வைப்பு தொகைக்கும் எவ்வளவு விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதற்கான முழு விளக்கங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

FD விகிதம்:

நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI) சில குறிப்பிட்ட தவணைகளுக்கான நிலையான வைப்பு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இந்த புதிய வட்டி விகிதம் ஆகஸ்ட் 13 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வந்துள்ளது. அதாவது, ரூ.2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ரிசர்வ் வங்கி SBI வங்கியின் ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியது. ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டதால் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

180 நாட்கள் முதல் 210 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான FD விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, FD விகிதம் 4.40 சதவீதத்தில் இருந்து 4.55 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுக்குள் முதிர்ச்சியடையும் டெபாசிட்டுகளுக்கான FD விகிதம் 15 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் கூட்டுறவு வங்கிகளின் உள்நாட்டு டெபாசிட்டுகளுக்கும் பொருந்தும் என SBI அறிவித்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் எண்ணும் & எழுத்தும் திட்டம் – பாடத்திட்டத்தில் புதிய மாற்றம்!

Exams Daily Mobile App Download

7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 2.90 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 3.40 சதவீதமும், 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 3.90 சதவீதமும் மூத்த குடிமக்களுக்கு 4.40 சதவீதமும், 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 4.55 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.05 சதவீதமும், 211 நாட்கள் முதல் 1 வருடம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 4.60 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.10 சதவீதமும், 1 ஆண்டு முதல் 2 ஆண்டுகளுக்கு குறைவான காலம் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 5.45 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 5.95 சதவீதமும், 2 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 5.50 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.00 சதவீதமும், 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகளுக்கும் பொது மக்களுக்கு 5.60 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.10 சதவீதமும், 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு பொது மக்களுக்கு 5.65 சதவீதமும், மூத்த குடிமக்களுக்கு 6.15 சதவீதமும் உயரத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!