Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மார்ச் 31 கடைசி நாள்!

0
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - மார்ச் 31 கடைசி நாள்!
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - மார்ச் 31 கடைசி நாள்!
Post Office செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – மார்ச் 31 கடைசி நாள்!

மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற செல்வ மகள் சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றில் நடப்பு நிதியாண்டு குறைந்தபட்ச தொகையை இந்த மாதம் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அப்படி டெபாசிட் செய்யாவிட்டால் திட்டம் செயலற்றதாகி விடும் என்று போஸ்ட் ஆபிஸ் அறிவித்துள்ளது.

முக்கிய அறிவிப்பு:

சேமிப்பு என்றவுடன் பலருக்கும் இப்போது போஸ்ட் ஆபீஸ் சேமிப்பு ஞாபகத்திற்கு வரும் அளவுக்கு போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் மக்களை கவர்ந்து வருகிறது. தபால் நிலையத்தில் வங்கிகளுக்கு இணையாக அதிக வட்டி தொகை அளிக்கப்பட்டு வருகின்றன. பொது மக்களும் அதிக அளவில் போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் பெண் குழந்தைகளின் படிப்பு , திருமணம் போன்ற தேவைகளுக்காக 2015ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பொது வருங்கால வைப்பு நிதி, தேசிய ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்களும் குறைந்த முதலீட்டில் அதிக முதிர்வு தொகையை தரும் திட்டங்கள் ஆகும்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்து – அரசுக்கு கேள்வி!

செல்வ மகள் சேமிப்பு திட்ட வாடிக்கையாளர்கள், நடப்பு நிதியாண்டில் எந்தத் தொகையும் செலுத்தாமல் இருந்தால், வரும் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்க வேண்டும் என நிர்வாகம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் நடப்பு நிதியாண்டிற்கான டெபாசிட் தொகையை செலுத்தாமல் இருந்து அடு்த்த நிதியாண்டு செலுத்தினால், ரூ.50 அபராதம் வசூலிக்கப்படும். இந்த அபராதம் ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கப்படும்.

பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள், இந்த மாதம் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சமாக ரூ.500 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்கலாம். நடப்பு நிதியாண்டு எந்தவிதமான தொகையையும் செலுத்தாமல் இருந்தால், ரூ.50 அபராதம் வசூலிக்கப்படும். மேலும் நிலுவைத் தொகைக் கட்டணமாகவும் ரூ.500 வசூலிக்கப்படும்.

இந்தியாவில் LPG சிலிண்டர் மானியம் – மத்திய அரசு ஆலோசனை!

ஒவ்வொரு நிதியாண்டிலும் PPF கணக்கு வைத்திருப்பவர் குறைந்தபட்ச தொகையை கணக்கில் செலுத்தியிருக்க வேண்டும். இவ்வாறு குறைந்தபட்ச தொகையை செலுத்தாவிட்டால் கணக்கு காலாவதி ஆகிவிடும். மேலும் கணக்கை உயிர்ப்பு செய்யாமல் பிபிஎப் கணக்குதாரர், தன்னுடைய கணக்கில் இருக்கும் பணத்தில் இருந்து கடனும் பெற முடியாது. எனவே இந்த மாதம் 31ம் தேதிக்குள் குறைந்தபட்ச தொகையை செலுத்தி விட வேண்டும்.

தேசிய ஓய்வூதிய திட்ட கணக்குதாரர்கள், நடப்பு நிதியாண்டில் இதுவரை பணம் செலுத்தாமல் இருந்தால், மார்ச் 31ம் தேதிக்குள் குறைந்தபட்சமாக ரூ.1000 செலுத்தி கணக்கை உயிர்ப்புடன் வைக்கலாம். அப்படி செலுத்தாமல் இருந்தால், கணக்கு காலாவதியாகிவிடும். மீண்டும் கணக்கை செயல்பாட்டுக்கு கொண்டு வர ரூ.100 அபராதம் செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!