PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகளுக்கு 12 ஆவது தவணைக்கான நிதியுதவி எப்போது கிடைக்கும் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நிதியுதவி பெறும் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை எப்படி பார்க்கலாம் என்பது குறித்தான விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PM KISAN திட்டம்:

பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் நிதியுதவி பெற்று பயனடைந்து வருகின்றனர். அதாவது, இத்திட்டத்தின் கீழ் இணைந்துள்ள விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 வீதம் வருடத்திற்கு 6000 வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இது வரைக்கும் 11 தவணைக்கான நிதியுதவி விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு சென்றடைந்துள்ளது. இந்நிலையில், 12 ஆவது தவணைக்கான நிதியுதவி எப்போது கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும், விவசாயிகள் 12 வது தவணைக்கான நிதியுதவியை பெற வேண்டும் என விரும்பினால் கண்டிப்பாக e-KYC செயல்முறையை நிறைவு செய்திருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் e-KYC செயல்முறையை நிறைவு செய்து அதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தால் மட்டுமே நிதியுதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, e-KYC செயல்முறையை முடிக்க ஜூலை 31 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த கால அவகாசம் நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் தான் இருப்பதால் விரைவில் செயல்முறையை நிறைவு செய்யும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கான புதிய ஏற்பாடுகள் – அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்

மேலும், PM கிசான் திட்டத்தின் 12 ஆவது தவணைக்கான நிதியுதவி ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது PM கிசான் பயனாளிகள் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை எப்படி சரிபார்ப்பது என்பதை பார்க்கலாம். முதலில் PM Kisan இன் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான www.pmkisan.gov.in என்கிற பக்கத்திற்கு சென்று Beneficiary List என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்னர், உங்களது மாநிலம், மாவட்டம், தொகுதி மற்றும் கிராம பஞ்சாயத்தின் பெயர் என அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து, Submit என்பதை கிளிக் செய்தால் PM கிசான் பயனாளிகளின் பட்டியலை பார்க்கலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!