திருப்பதி செல்லும் பக்தர்களுக்கான புதிய ஏற்பாடுகள் – அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்!

0
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கான புதிய ஏற்பாடுகள் - அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கான புதிய ஏற்பாடுகள் - அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்!
திருப்பதி செல்லும் பக்தர்களுக்கான புதிய ஏற்பாடுகள் – அதிகாரிகள் ஆலோசனை கூட்டம்!

உலக புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறும். கடந்த 2 வருடங்களாக கொரோனா பெருந்தொற்று காரணமாக இவ்விழா நடைபெறவில்லை. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் இந்த ஆண்டு பிரம்மோற்சவ விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரம்மோற்சவ விழா:

ஆந்திராவில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி திருக்கோயிலில் எல்லா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இங்கு இந்தியாவின் அனைத்து பகுதிதிகளில் இருந்தும் மக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை புரிவர். அதுமில்லாமல் வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகளும் வருகை தருவர். இந்த நிலையில் பரவிய கொரோனா பேரிடர் காரணமாக திருப்பதியில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் முக்கிய பூஜைகள், விழாக்கள் போன்றவைகளும் ரத்து செய்யப்பட்டது. அதில் ஒன்றாக ஆண்டுதோறும் சுவாமிக்கு நடைபெறும் பிரம்மோற்சவ விழாவும் 2 வருடங்களாக நடத்தப்படவில்லை.

Exams Daily Mobile App Download

அதனால் இந்த வருடம் செப்டம்பர் 17ம் தேதி பிரம்மோற்சவ விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் கொடியேற்றத்துடன் விழா தொடங்கி அக்டோபர் 5ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவின் போது மாட வீதிகளில் காலையும், மாலையும் வாகன சேவை நடைபெற தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. இந்த நிலையில் திருமலையில் உள்ள அன்னமய பவனில் தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய தேவஸ்தான முதன்மை செயலாளர் 1ம் தேதி கருடசேவை, 2ம் தேதி தங்கத் தேரோட்டம், 4ம் தேதி தேர் திருவிழா, 5ம் தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

நாட்டில் அதிரடியாக அவசர நிலை பிரகடனம் – குரங்கு அம்மை நோய் பரவல் எதிரொலி

அத்துடன் பிரம்மோற்சவ விழா நாட்களில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் தரிசனம் மற்றும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்களுக்கு தட்டுப்பாடு இன்றி லட்டு பிரசாதங்கள் வழங்கப்படும். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு சேவை செய்ய 3,500 ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் மற்றும் கூடுதலாக 5,000 துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறியுள்ளார். அடுத்ததாக பேசிய அம்மாவட்ட ஆட்சியர், மாவட்ட அளவில் அனைத்து துறை அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்படும். அதன் பின் முழுமையான செயல் திட்டம் தயார் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here