CUET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

0
CUET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
CUET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு - தேர்வு முடிவுகள் வெளியீடு!
CUET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் வெளியீடு!

நாட்டில் இருக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு CUET என்ற நுழைவு தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. தற்போது இத்தேர்வுக்குரிய தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

தேர்வு முடிவுகள்

நாடு முழுவதும் மத்திய பல்கலைக்கழக நிறுவனங்களில் இளநிலை படிப்பு, முதுநிலை படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு CUET தேர்வு என்ற பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் இத்தேர்வானது 2020 புதிய தேசிய கல்விக் கொள்கையின் படி, மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளநிலை மற்றும் முதுநிலை படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படுகிறது. இத்தேர்வு கணினி வழியில் தமிழ், இந்தி உட்பட 13 மொழிகளில் நடத்தப்படுகிறது. இதில் இளங்கலை பட்டப் படிப்புக்கான தேர்வு (CUET UG), முதுகலை படிப்பிற்கான தேர்வு (CUET PG) என இருவகையில் நடத்தப்படுகிறது.

இதில் முதுகலை படிப்பிற்கான தேர்வானது (CUET PG) நாடு முழுவதும், கடந்த செப்டம்பர் 1 முதல் 12ம் தேதி வரை தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்விற்கு 6 லட்சத்து 7648 பேர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் இத்தேர்வை 3 லட்சத்து 34 ஆயிரத்து 997 பேர் மட்டுமே எழுதியதாக தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 16ம் தேதி அன்று இத்தேர்விற்குரிய Answer key, தேர்வரின் OMR விடைத்தாள் மற்றும் இயந்திரம் பதிவு செய்த தேர்வரின் விடைகள் தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

Exams Daily Mobile App Download

காவல் துறையினருக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி? – நீதிமன்ற உத்தரவு!

இதையடுத்து முதுகலை படிப்பிற்கான CUET PG தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என தேர்வர்கள் காத்திருந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் இத்தேர்வின் முடிவுகள் இன்று தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்ய விரும்பும் மாணவர்கள் cuet.nta.nic.in என்ற தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பான சந்தேகங்களை கேட்டறிய 011 40759000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!