சென்னைவாசிகள் கவனத்திற்கு – ஏப்ரல் 30 முதல் அமலுக்கு வரும் போக்குவரத்து மாற்றங்கள்!

0
சென்னைவாசிகள் கவனத்திற்கு - ஏப்ரல் 30 முதல் அமலுக்கு வரும் போக்குவரத்து மாற்றங்கள்!
சென்னைவாசிகள் கவனத்திற்கு - ஏப்ரல் 30 முதல் அமலுக்கு வரும் போக்குவரத்து மாற்றங்கள்!
சென்னைவாசிகள் கவனத்திற்கு – ஏப்ரல் 30 முதல் அமலுக்கு வரும் போக்குவரத்து மாற்றங்கள்!

சென்னை அண்ணாசாலையில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்தை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரு பக்கத்திலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளை( ஏப்ரல் 30) முதல் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது.

போக்குவரத்து மாற்றங்கள்:

அண்ணாசாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேற்கொள்ளப்பட்ட சோதனை ஓட்ட முயற்சிகள் வெற்றிகரமாக அமைந்ததால் போக்குவரத்து மாற்றம் நடைமுறைக்கு வருகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல், அண்ணாசாலை – திரு.வி.க.சாலை சந்திப்பில் புதிய போக்குவரத்து மாற்றங்கள் தொடா்பாக சோதனை ஓட்டம் சனிக்கிழமை (ஏப்.9) முதல் செயல்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையில் சென்னை, அண்ணா சாலை, ஸ்பென்சா் சந்திப்பிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அனைத்தும், அண்ணாசாலை –திரு.வி.க.சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திரு.வி.க. சாலையில் வலதுபுறம் சென்று ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலை சென்றடையலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் அண்ணா சாலை மேம்பாலத்தில் இருந்து ஒயிட்ஸ் சாலை வழியாக வரும் வாகனங்கள் அண்ணாசாலை – திரு.வி.க.சாலை சந்திப்பில் வலதுபுறம் திரும்பி திரு.வி.க. சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்லலாம். மேலும் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதால் இந்த மாற்றங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வருகின்றன. இது குறித்து சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் அண்ணாசாலை – திரு.வி.க. சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வேண்டி அண்ணாசாலை – திரு.வி.க சாலை சந்திப்பில் கடந்த 09.04.2022 முதல் சோதனை ஓட்டமாக பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டது.

இந்தியாவில் 670 ரயில்கள் ரத்து – நிலக்கரி பற்றாக்குறையால் அரசு அதிரடி அறிவிப்பு!

1. அண்ணா சாலை ஸ்பென்சர் சந்திப்பிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி (அவுட்கோயிங்) செல்லும் வாகனங்கள் அனைத்தும் கட்டாயமாக அண்ணாசாலை – திரு.வி.க சாலை சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திரு.வி.க சாலையில் வலது புறம் சென்று ஒயிட்ஸ் சாலை வழியாக அண்ணா சாலை செல்லலாம்.

2.இதையடுத்து அண்ணா மேம்பாலத்தில் இருந்து ஒயிட்ஸ் சாலை செல்லும் வாகனங்கள் (இன்கமிங்) அண்ணா சாலை – திரு.வி.க சாலை சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க சாலை வழியாக ஒயிட்ஸ் சாலை செல்லலாம்.

3.இந்த போக்குவரத்து மாற்றம் நன்றாக செல்வதால் ஏப்ரல் 20 முதல் ஆனந்த் திரையரங்கம் முன்பாக உள்ள சாலைத் தடுப்பு வழியாக அனைத்து வாகனங்களையும் ஒன்று சேர்த்து அனுப்பி வைத்து தொடர்ந்து இந்த போக்குவரத்து மாற்றத்தை செயல்படுத்தலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை ஓட்டம் தொடா்பாக பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!