CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

CBSE 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான நடைமுறை தேர்விற்கான மதிப்பெண்ணை பதிவு செய்யவில்லையென்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்களுக்கும் பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடைமுறை தேர்வு:

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா பரவலின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தான் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்த இரண்டு ஆண்டுகளுமே பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எதுவும் நடத்தப்படாமல் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேர்வெழுதவுள்ளதால் மாணவர்களும் அச்சத்தோடு தான் தேர்வெழுத சென்றனர்.

Exams Daily Mobile App Download

மாணவர்களின் வசதிக்காக 35% வரைக்கும் பாட திட்டங்கள் குறைக்கப்பட்டன. CBSE பள்ளியில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதத்திலேயே நடைமுறை தேர்வு நடத்தப்பட்டது. பல பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான நடைமுறைத் தேர்வுகள் அல்லது அகமதிப்பீடு மதிப்பெண்ணை பதிவு செய்யாமல் இழுத்தடித்து கொண்டிருந்தனர். இந்நிலையில் CBSE நிர்வாகம் CBSE உடன் இணைந்த பள்ளிக்கூடங்களுக்கு எச்சரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான நடைமுறை தேர்வு மதிப்பெண்ணை 39 பள்ளிகள் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான நடைமுறை தேர்வு மதிப்பெண்ணை 537 பள்ளிகளும் பதிவு செய்யவில்லை. மேலும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத்திற்கான நடைமுறை தேர்வு மதிப்பெண்ணை 141 பள்ளிகளும் , இரண்டாம் பருவத்திற்கான நடைமுறை தேர்வு மதிப்பெண்ணை 185 பள்ளிகளும் பதிவு செய்யவில்லை. இதனால் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்ணை மே 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் எனவும், 12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்ணை ஜூன் 5 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!