வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பணத்தினை டெபாசிட் செய்ய ஆதார், பான் கார்டு அவசியம்!

0
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - பணத்தினை டெபாசிட் செய்ய ஆதார், பான் கார்டு அவசியம்!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - பணத்தினை டெபாசிட் செய்ய ஆதார், பான் கார்டு அவசியம்!
வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – பணத்தினை டெபாசிட் செய்ய ஆதார், பான் கார்டு அவசியம்!

இந்தியாவில் வங்கிகளில் பணம் பரிவர்த்தனை செய்ய புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மே 26ம் முதல் இந்த புதிய விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இவை பொது மற்றும் தனியார், அஞ்சலகங்கள் அனைத்திற்கும் பொருந்தும்.

புதிய விதிகள்:

இந்தியாவில் வங்கி சேவை அத்தியாவசிய ஒன்றாக உள்ளததால் ஊரடங்கு காலத்திலும் குறிப்பிட்ட நேரம் வரை குறைந்த பணியாளர்களை வைத்து வங்கிகள் செயல்பட்டு வந்தது. இந்த நேரத்தில் வாடிக்கையாளர்களின் கூட்டத்தை தவிர்க்க வங்கிகள் இணையதளம் வாயிலாக பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியது. இத்தகைய முக்கிய பங்கு வகிக்கும் வங்கி பண பணபரிவர்த்தனைகளில் அவ்வப்போது புதிய விதிகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏடிஎம் இயந்திரங்களில் பண பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது.

Exams Daily Mobile App Download

மெட்ரோ நகரங்களில் மாதத்திற்கு 3 முறை மட்டுமே இலவசமாக பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என்றும் பிற நகரங்களில் 5 முறை இலவசமாக பரிவர்த்தனை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி கிரெடிட் கார்டுகளையோ டெபிட் கார்டுகளையோ வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் விநியோகிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது புதிய விதியாக 20 லட்ச ரூபாய்க்கு மேல் உள்ள பண பரிவர்தனைகளுக்கு ஆதார், பான் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் – மாநில அரசு முடிவு!

மேலும் ஆதார் அல்லது பான் எண் இல்லாமல் 20 லட்ச ரூபாயை எடுக்கவோ அல்லது டெபாசிட் செய்ய முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் மே 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் இவை பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள், அஞ்சல் நிலையக் கணக்குகள், கோ-ஆப்பரேட்டிவ் வங்கிகளுக்கும் பொருந்தும் என்றும் மோசடியான எந்த ஒரு பரிவர்த்தனையும் மேற்கொள்ளாமல் தவிர்க்க இந்த புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!