ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – போலி கார்டுகளை கண்டறியும் வழிகள் இதோ!

0
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - போலி கார்டுகளை கண்டறியும் வழிகள் இதோ!
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - போலி கார்டுகளை கண்டறியும் வழிகள் இதோ!
ஆதார் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – போலி கார்டுகளை கண்டறியும் வழிகள் இதோ!

இந்தியாவில் ஆதார் ஒவ்வொருவரின் அடையாள ஆவணமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் போலி ஆதார் கார்டுகள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. அதனால் உங்களின் ஆதார் அட்டை உண்மையானதா என்பதை நீங்கள் உறுதி செய்து கொள்வது அவசியம்.

ஆதார் அட்டை:

இந்தியாவில் 12 இலக்க எண்களை கொண்ட ஆதார் அட்டையை மத்திய ஆதார் அமைச்சகம் வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு குடிமகனின் அடையாளமாக விளங்குகிறது. இந்த ஆதார் அட்டை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும், வங்கி பணப் பரிவர்த்தனைகள், சிம் கார்டு வாங்குதல், கேஸ் இணைப்பு பெறுதல், பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை போன்ற அனைத்து வேலைகளுக்கும் பயன்படுகிறது. இவ்வாறு அனைத்து பயன்பாடுகளுக்கும் உதவும் ஆதாரை நாம் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும். அதாவது உள்ள பெயர், மொபைல் எண், முகவரி போன்ற விவரங்களை சரியாக வைத்து கொள்வது அவசியம்.

தமிழகத்தில் நாளை (ஜூலை 27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – தமிழ்நாடு மின்வாரியம் தகவல்!

தற்போது ஆதாரில் ஆன்லைன் மூலமாக வீட்டில் இருந்தபடியே விவரங்களை மாற்றும் வசதி வந்து விட்டது. அதே நேரம் போலியான ஆதார் கார்டுகள் பயன்பாடும் பெருகி விட்டது. இதனை கண்டறிந்து ஆதார் ஆணையம் சுமார் 6 லட்சம் ஆதார் எண்களை தொகுத்து நீக்கம் செய்துள்ளது. இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது போலி ஆதார் அட்டைகள் உருவாவதை தடுக்க மத்திய அரசு என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று கேட்கப்பட்டது. அதற்கு ஒருவரின் அடையாளத்தை உறுதி செய்ய அவர் புகைப்படத்தையும் ஆதார் எண்ணுடன் இணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய இணை அமைச்சர் பதிலளித்துள்ளார்.

உங்கள் ஆதாரை உறுதி செய்யும் வழிகள்:

  • முதலில் https://resident.uidai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் AADHAR VERIFY என்பதை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து வரும் பக்கத்தில் உங்களின் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளீடு விர்ச்சுவல் ஐடியை கொடுக்கவும்.
  • பிறகு ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஒடிபி வரும். அதனை பதிவிட்டு உள்நுழையவும்.
  • அடுத்து வரும் பக்கத்தில் உங்களில் ஆதார் எண் உண்மையானதா போலியானதா என்பது தெரிந்து விடும்.
  • அதில் தெரியும் உங்களின் ஆதார் எண், பெயர், மாநிலம், வயது, பாலினம், உள்ளிட்ட விவரங்கள் திரையில் தெரியும். இதனை வைத்து உங்கள் ஆதாரை உறுதி செய்யலாம்.
  • TNPSC Online Classes
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!