ATM பில்களால் உயிருக்கே ஆபத்து.. வெளியான ஷாக் ரிப்போர்ட் – முழு விவரம்!

0
ATM பில்களால் உயிருக்கே ஆபத்து.. வெளியான ஷாக் ரிப்போர்ட் - முழு விவரம்!
ATM பில்களால் உயிருக்கே ஆபத்து.. வெளியான ஷாக் ரிப்போர்ட் - முழு விவரம்!
ATM பில்களால் உயிருக்கே ஆபத்து.. வெளியான ஷாக் ரிப்போர்ட் – முழு விவரம்!

மக்கள் பலர் ஏடிஎம், ஓட்டல், மளிகை கடை வரை பலர் டிஜிட்டல் பில்களை கொடுக்க தொடங்கிவிட்டனர். அந்த பில்களில் இருக்கும் ரசாயன பொருள்கள் மூலமாக உயிருக்கே ஆபத்து வரும் என எச்சரிக்கை தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஆபத்து ரசாயனம்

பல இடங்களில் பெரிய கடைகள் முதல் சிறிய கடைகள் வரையும், ஓட்டல்கள் முதல் ஏடிஎம் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பில் வழங்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பில் வெள்ளைத்தாளில் பிரிண்ட் செய்யப்பட்டு வரும். அது பளபளப்புடன் இருக்கும், இதற்கு ரசீதுகள் தெர்மல் பேப்பர் பில்கள் என அழைக்கப்படுகின்றன. மேலும் இதில் பிபிஏ எனும் பிஸ்பீனால் – ஏ (BPA or bisphenol-A) மற்றும் பிபிஎஸ் எனும் பிஸ்பீனால்- எஸ் (BPS or Bisphenol – S) எனும் ரசாயனங்கள் இருக்கின்றன.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

இந்த கெமிக்கல்ஸ் தான் தெர்மல் பேப்பர் பில்களை திடமாகவும், வெப்பத்தை எதிர்க்கும் தன்மையுடனும் மாற்றுவதோடு, மை இல்லாமல் அச்சிடவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கிறது. அதனால் உடலுக்கு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிபிஏ ரசாயனம் காற்றில் பரவக்கூடியது. மேலும் கையில் ஒருவர் வைத்திருந்தால் அது தோலுக்குள் பரவி உடலுக்குள் ஊடுருவி பிரச்சனையை ஏற்படுத்தும். மேலும் இந்த ரசாயனங்கள் உயிரணு உற்பத்தியை குறைப்பதோடு, நீரிழிவு நோய், புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.

ஏழை குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி – ரேஷன் கடைகளில் இன்று முதல் அமல்!

மேலும் இந்த பில்களுக்கு ஐரோப்பா ஒன்றியம், கனடா, மலேசியா, சீனா ஆகிய நாடுகளிலும், அமெரிக்காவின் சில மாநிலங்களில், மக்களின் நலன் கருதி தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இந்த பில்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. மேலும் ஹார்வர்ட் பப்ளிக் ஹெல்த் பல்கலைக்கழகத்தில் 2015ல் நடத்தப்பட்ட ஆய்வில்2 மணிநேரம் கையுறைகள் ஏதுமின்றி இந்த ரசீதுகளை கையாள்வது என்பது உடலுக்கு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்க ரசீது வாங்கிய பின் நீங்கள் உங்களது கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!