சென்னையில் நாளை (டிச.20 & 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
சென்னையில் நாளை (டிச.20 & 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் நாளை (டிச.20 & 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் நாளை (டிச.20 & 21) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் தொடர்ந்து மாதாந்திர மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் மின்பராமரிப்பு பணி காரணமாக நாளை டிச.20 மற்றும் நாளை மறுநாள் டிச.21ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மின்தடை அறிவிப்பு:

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மின்சாரத்துறையின் கீழ் உள்ள மின்நிலையங்களில் மாதந்தோறும் மின்பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதாவது எதிர்காலத்தில் மின்விபத்து ஏற்படாமல் தடுக்கும் விதமாக இந்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் விதமாக பழுதான கம்பிகள் அகற்றப்பட்டு புதிய கம்பிகள் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இத்தகைய பணிகளின் காரணமாக குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்வாறு மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பகுதிகளில் ஏற்படும் மின்தடை குறித்து குறிப்பிட்ட மின்வாரிய பொறியாளரால் செய்திதாள் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் தகவல் வெளியிடப்படும்.

Vijay TV Bigg Boss 5 Promo 2 | பிரியங்கா காப்பாற்றப்பட்டதாக அறிவித்த நடிகர் ஆதி!

அந்த வகையில் சென்னையில் திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள மாட்டன்குப்பம், வி.ஆர்.பிள்ளை தெரு, கற்பக கன்னியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பைகிராப்ட்ஸ் சாலை, பழனியம்மன் கோயில் 1 முதல் 5-வது தெரு வரை, பாரதி சாலை. மேலும் ராஜா அனுமந்தலாலா தெரு, வெங்கடாசல நாயக்கன் 1 முதல் 3-வது தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை திசை 20ம் தேதி மின்பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் அடையார் பாலவாக்கம் பகுதியில் வி.ஜி.பி லேயவுட் முதல் குறுக்குதெரு, அண்ணா சாலை, பாலவாக்கம் குப்பம், சங்கரபுரம், சீசேல் அவென்யூ, ரேடியோ காலனி, சாரி அவென்யூ, சைத்தனியா அவென்யூ, ராம் கார்டன், பூங்கா தெரு, அம்பேத்கர் தெரு உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.

நாடு முழுவதும் ஓமைக்ரானால் 2022 இல் கொரோனா 3வது அலை? ஷாக் ரிப்போர்ட்! பொதுமக்கள் கவனத்திற்கு!

அதனை தொடர்ந்து சிறுசேரி பகுதியில் சிப்காட், சிறுசேரி, பாசிபிகா அப்பார்ட்மெண்ட், ரெடியன்ஸ் அப்பார்ட்மெண்ட், பிள்ளையார் கோயில் தெரு படூர் கிராமம் உள்ளிட்ட பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் நாளை மறுநாள் டிச.21ம் தேதி அஸ்தினாபுரம் பகுதியில் வெங்கடராமன் நகர், சிவகாமி நகர், காயத்ரி நகர், கிருஷ்ணா நகர், பாஷ்யம் நகர், பி.பி.ஆர் மற்றும் புவனேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்செட்டி பகுதியில் அழிஞ்சிவாக்கம், அத்திப்பட்டு, இருளிப்பட்டு, ஜன்பச்சத்திரம், பி.பி ரோடு, ஜெகநாதபுரம் ரோடு, சாய்கிருபா நகர் மற்றும் விருந்தவன் நகர் பகுதிகளிலும் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு மேல் பணி முடிந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here