Vijay TV Bigg Boss 5 Promo 2 | பிரியங்கா காப்பாற்றப்பட்டதாக அறிவித்த நடிகர் ஆதி!
விஜய் டிவி “பிக்பாஸ்” நிகழ்ச்சியில் 11வது வார முடிவில் நாமினேஷன் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டவர் குறித்து சிறப்பு விருந்தினர் கலந்து கொள்ளும் ப்ரோமோ ஒன்று வெளியாகி உள்ளது.
பிக்பாஸ் ப்ரோமோ:
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 70 நாட்களை கடந்து செல்கிறது. இந்த சீசன் தொடக்கத்தில் 18 போட்டியாளர்கள் இருந்த நிலையில் தற்போது இறுதி போட்டி நெருங்கி வருகிறது. இந்த வாரம் 11 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் ஒருவர் வெளியேற இருக்கிறார். இதுவரை 10 போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர். இந்த வாரம் பிரியங்கா, ராஜு, அக்ஷரா, வருண், பாவ்னி, நிரூப், அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் ஓமைக்ரானால் 2022 இல் கொரோனா 3வது அலை? ஷாக் ரிப்போர்ட்! பொதுமக்கள் கவனத்திற்கு!
இந்த வாரம் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டவர்களை அறிவிக்க புதுமையான முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன் படி சிவகுமாரின் சபதம் பட ஹீரோ ஆதி, படக்குழுவினருடன் கலந்து கொண்டுள்ளார். அவர் நாமினேஷனில் இருந்து காப்பாற்றப்பட்டவரை வித்தியாசமான முறையில் அறிவித்துள்ளார். அதன் படி நான் இங்கே இருக்கும் போட்டியாளர்களில் ஒரு சிலரை தான் பாத்திருக்கேன் அதில் ஒருவர் தான் காப்பாற்றப்பட்டுள்ளார் என சொல்கிறார்.
தமிழகத்தில் நாளை (டிச.20) பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அப்போது போட்டியாளர்களில் பிரியங்கா காப்பாற்றப்பட்டதாக அறிவித்தார். அதை கேட்டு பிரியங்கா சந்தோஷப்பட்டார். மேலும் சமீபத்தில் வெளியான தகவலின் படி அபிநய் இந்த சீசனில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் பரவி வருகிறது. மேலும் இனிமேல் நடக்கும் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.