
இனியாவை முடிவு செய்ய சொல்லும் பாக்கியா? வெளியேறுவாரா கோபி? சீரியலில் அடுத்து வரும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா இனியாவிடம் உனக்கு அம்மாவுடன் இருக்க வேண்டுமா அப்பா உடன் இருக்க வேண்டுமா என முடிவு செய்ய சொல்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் என்ன நடக்க இருக்கிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாக்கியலட்சுமி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் டி.ஆர்.பியில் கலக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் கடந்த சில வாரமாக சீரியலில் எதிர்பார்க்காத திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அதாவது பாக்கியலட்சுமி சீரியலில் கோபி செய்த பித்தலாட்டமும் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதனால் சீரியல் படு வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் பாக்கியா கோபியை பிரிய முடிவு செய்த நிலையில் கோர்ட்டில் தன் பக்கம் நியாயத்தை சொல்ல எளிதாக விவாகரத்து கிடைத்துவிடுகிறது.
அதனால் பயங்கர கோபத்தில் இருக்கும் கோபி பாக்கியாவை இனிமேல் வீட்டிற்குள் வரக்கூடாது என சொல்கிறார். இந்நிலையில் பாக்கியா என்ன முடிவு எடுப்பார் அடுத்து எங்கே போவார் என ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில் அவர் எழிலை வீட்டிற்கு அழைத்து செல்ல சொல்கிறார். அங்கே அனைவரும் பாக்கியா வந்ததை நினைத்து சந்தோசப்பட ஆனால் கோபி இனிமேல் இந்த வீட்டில் உனக்கு இடமில்லை என சொல்கிறார். எழில் அம்மா இங்கே இருக்க வரவில்லை என சொல்ல மாடிக்கு சென்ற பாக்கியா துணிமணிகளை எடுத்துக் கொண்டு கீழே வருகிறார்.
தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்க முக்கிய நடவடிக்கை – டிஜிபி அதிரடி!
மேலும் ஈஸ்வரி, செழியன் என அனைவரும் பாக்கியா தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும் என சொல்ல, ஆனால் பாக்கியா எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். பின் இனியா என்னை பற்றி கவலைப்படவில்லையா என கேட்க உடனே பாக்கியா உனக்கு அம்மா உடன் இருக்க வேண்டுமா அப்பா உடன் இருக்க வேண்டுமா என முடிவு செய்ய சொல்கிறார். அதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகிறார். இந்நிலையில் அடுத்த வார எபிசோடில் இனியா பாக்கியா தான் முக்கியம் என சொல்ல, அதனால் கோபி வீட்டை விட்டு வெளியேறுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
Appappaaa ennaaa twist ennaaaa twist …