தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா?

0
தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா?
தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா?
தமிழகத்தில் நவம்பர் மாதத்தில் இத்தனை நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறையா?

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு எதிர்பாராத விடுமுறைகள் அடிக்கடி வந்து கொண்டிருக்கும் நிலையில், நவம்பர் மாத விடுமுறைகள் குறித்து இப்பதிவில் அறிந்து கொள்ளலாம்.

பள்ளி விடுமுறை:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டு என்பது மறக்க முடியாத ஆண்டாக இருக்கும். கிட்டத்தட்ட மாணவர்கள் தங்கள் வகுப்பறைகளை 2 ஆண்டுகளாக மறந்து விட்டிருந்த நிலையில், 2022-2023ம் கல்வி ஆண்டு வழக்கம் போல் பள்ளிகளில் நேரடியாக நடைபெறும் என்ற அறிவிப்பு பலருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. இப்பொது மாணவர்கள் உற்சாகமாக பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

சன்னும் இல்ல, விஜயும் இல்ல.. ஆல்யா ரீஎன்ட்ரி கொடுக்க போகும் சேனல் இது தான்!

ஆனால், எதிர்பாராத வகையில் அடிக்கடி விடுமுறைகள் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது. கடந்த மாதம் காலாண்டு தேர்வு விடுமுறை, தீபாவளி விடுமுறையை தவிர்த்து, கனமழை காரணமாக பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழக அரசு 2022 நவம்பர் மாத விடுமுறை அட்டவணையின் படி, 12.11.2022 அன்று 2 வது சனிக்கிழமை மற்றும் 26.11.2022 அன்று 4 வது சனிக்கிழமை மட்டும் தான் வார இறுதி நாளான ஞாயிறை தவிர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Follow our Instagram for more Latest Updates

ஆனால் நடப்பு கல்வியாண்டில் மாணவர்களுக்கு மனஅழுத்தம் அதிகரித்து விடக்கூடாது என்பதற்காக அரசு அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை நாளாக அறிவிக்க உத்தரவிட்டிருந்தது. இதனால் வர இறுதி நாட்களில் 8 நாட்கள் விடுமுறையாகும். மேலும், நேற்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!