சிலிண்டர் முதல் கார், பைக் விலை வரை.. ஏப்ரல் 1 முதல் மாற்றம் – அலர்ட் மக்களே!

0
சிலிண்டர் முதல் கார், பைக் விலை வரை.. ஏப்ரல் 1 முதல் மாற்றம் - அலர்ட் மக்களே!

இந்தியாவில் ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய நிதியாண்டு தொடங்க இருக்கிறது. அதனால் பணம் குறித்த சில விதிமுறைகளில் மாற்றம் வர இருக்கிறது.

மாத தொடக்கம்

புதிய நிதியாண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த புது நிதியாண்டில் பல மாற்றங்கள் வர இருக்கிறது. அதாவது தனிநபர் நிதி, முதலீட்டு திட்டம், ஃபாஸ்டாக், பிஎஃப் என பல மாற்றங்கள் வர இருக்கிறது. அது குறித்த முழு விவரங்களை கீழே பார்க்கலாம்.

பான்- ஆதார் இணைப்பு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை மார்ச் 31 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும், அப்படி இணைக்காமல் இருந்தால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் பான் கார்டு ரத்து செய்யப்படும்.

சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும். அந்த வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதி புதிய சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால் தேர்தல் வர இருப்பதால் இந்த முறை மாற்றம் இருக்காது.

தேசிய பென்சன் திட்டம்

புதிய நிதியாண்டில் தேசிய பென்சன் திட்டத்தில் மாற்றம் இருக்கும். இந்த புதிய விதி ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். அதாவது தேசிய பென்சன் திட்டக் கணக்கில் உள்நுழைய இரண்டு காரணி அங்கீகாரம் தேவைப்படும். NPS சந்தாதாரர்கள் ஆதார் சரிபார்ப்பு மற்றும் மொபைலில் பெறப்பட்ட OTP மூலம் உள்நுழைய வேண்டும் போன்ற புதிய விதிகள் இருக்கும்.

கிரெடிட் கார்டு

SBI கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு ஏப்ரல் 1 முதல் விதிகளில் பெரிய மாற்றம் இருக்கும். அதாவது ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு வாடகையைச் செலுத்தினால் அவர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காது. இந்த மாற்றம் சில கிரெடிட் கார்டுகளுக்கு ஏப்ரல் 15 முதல் பொருந்தும்.

தமிழகத்தில் மாதம் ரூ.30,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

EPFO மாற்றம்:

வேலை மாறினாலும் உங்களின் பழைய பிஎப் ஆட்டோ பயன்முறையில் மாற்றப்படும். இந்த புதிய விதி ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.

ஃபாஸ்டாக்

ஃபாஸ்டாக் கணக்கின் KYC சரிபார்ப்பை வங்கியில் இருந்து மார்ச் 31 ஆம் தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும். இல்லையென்றால் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் KYC இல்லாத ஃபாஸ்டாக் கணக்கு வங்கியால் முடக்கப்படும். அதன் பின் ஃபாஸ்டாக்கில் பேலன்ஸ் இருந்தாலும் பணம் செலுத்த முடியாது.

வங்கி விடுமுறை

ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் வங்கி விடுமுறை ஆகும். இதில் சனி மற்றும் ஞாயிறு தினங்களிலேயே சில பொதுவான விடுமுறை நாட்களும் இருக்கின்றன. அது தவிர ஏப்ரல் 10, 17 ஆகிய தினங்களும் விடுமுறையாக இருக்கின்றன.

கார், பைக் விலை:

ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களுடைய உற்பத்தி மற்றும் விற்பனையில் ஏப்ரல் 1 முதல் மாற்றம் செய்ய இருக்கிறது. அதனால் இனி வாகனங்களின் விலையில் மாற்றம் இருக்கும். எனவே புதிய வாகனம் வாங்கும் போது விலை குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!