தமிழக அரசு ITI நேரடி மாணவர் சோ்க்கை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அரசு ITI காலிப்பணியிடங்களை நிரப்ப நேரடி பணிகள் தொடங்கி உள்ளது.
மாணவர் சேர்க்கை:
கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ள நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து முடியும் நிலையில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் வி.ஜெயச்சந்திரபானு ரெட்டி செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இயற்கை உணவு – பக்தர்களுக்கு விற்பனை!
2021- 22 ஆம் ஆண்டுக்கான அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற்பிரிவுகளுக்கு காலிப்பணியிடங்களை நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து செப்டம்பர் 15 ஆம் தேதி வரை நேரடி சேர்க்கை நடைபெறுகிறது. இதில் 14 வயது முதல் 40 வயது வரை உடைய ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 14 வயது நிரம்பிய பெண்களும் இதில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ஒயர்மேன் 2 வருட பிரிவிற்கும், வெல்டா் 1 வருட பிரிவிற்கும் தகுதியானவர்கள். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் கணினி இயக்குபவர்கள் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா் மகளிர் 1 வருடம், கணினிவன் பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு 1 வருடம், மின் பணியாளா் 2 வருடம், கம்மியா் மின்னணுவியல் 2 வருடம், பொருத்துநா் 2 வருடம், அச்சு வார்ப்பவா் தொழில்நுட்பவியலாளா் 1 வருடம், கம்மியா் கருவிகள் 2 வருடம், கம்மியா் இயந்திரம், மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளா் 2 வருடம், இயந்திர வேலையாள் 2 வருடம், கம்மியா் மோட்டாா் வண்டி 2 வருடம், கம்மியா் மோட்டாா் வண்டி 2 வருடம், கருவி மற்றும் அச்சு செய்பவா் 2 வருடம் மற்றும் கடைசலா் 2 வருடம் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
இந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் 50 ருபாய், சோ்க்கை கட்டணம் ஒரு வருட பயிற்சி பிரிவுக்கு ரூ.185-ம், இரண்டு வருட பயிற்சி பிரிவுக்கு ரூ.195-ம் ஆன்லைன் மூலம் செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 750 உதவித்தொகை வழங்கப்படுகிறது. பாட புத்தகம், வரைபட கருவிகள், மடிக்கணினி, சீருடை, மிதிவண்டி, இலவச பேருந்து பயண அட்டை, காலனி ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படுவதோடு ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதியும் உண்டு. மேலும் விவரங்களுக்கு 04344-262457 என்ற எண்ணை அணுகவும்.