TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளோர் கவனத்திற்கு – A டூ Z விபரங்கள் இதோ!

0
TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளோர் கவனத்திற்கு - A டூ Z விபரங்கள் இதோ!
TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளோர் கவனத்திற்கு - A டூ Z விபரங்கள் இதோ!
TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு விண்ணப்பிக்க உள்ளோர் கவனத்திற்கு – A டூ Z விபரங்கள் இதோ!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான அறிவிப்பை ஆசிரியர் பணியாளர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட தகவல்களை பெற்று கொண்டு விரைவில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு கூறப்பட்டு உள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு:

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி வருகின்றது. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று இருந்த காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வராமல் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் tnpsc குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.

சென்னை : ஆபரண தங்கத்தின் விலை அதிரடி சரிவு – நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

இந்த நிலையில் சமீபத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுகளுக்கான தேதியையும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. பிளஸ் 12 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் இந்த அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் 2022 ஆம் வருடத்திற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் I மற்றும் தாள் II மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்து உள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான தகுதிகள், தாள் 1 க்கு அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சி கல்வியை முடித்து இருக்க வேண்டும். அடுத்தாக தாள் 2 க்கு அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இளங்கலை பட்டம் பெற்று பி. எட் முடித்தவர்களும், மற்றும் முதுகலை பட்டம் பெற்று பி. எட் முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.

கோவா, உபி, மணிப்பூர் உள்ளிட்ட 4 மாநிலங்களை கைப்பற்றும் பாஜக – பஞ்சாபில் ஆம் ஆத்மி! தேர்தல் முடிவுகள் வெளியீடு!

இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி , பிசி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தேர்வு தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்றும், தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்றும் நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பித்து கொள்ளலாம் என்றும் ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!