Apple iPhone 13 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்? தேதி, விலை உள்ளிட்ட விபரங்கள்!

0
Apple iPhone 13 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்? தேதி, விலை உள்ளிட்ட விபரங்கள்!
Apple iPhone 13 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்? தேதி, விலை உள்ளிட்ட விபரங்கள்!
Apple iPhone 13 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம்? தேதி, விலை உள்ளிட்ட விபரங்கள்!

ஆப்பிள் நிறுவனத்தின் மற்றுமொரு தயாரிப்பான ஐபோன் 13 சீரிஸை இந்தியாவில் வெளியிடுவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம் என தகவல்கள் கூறுகின்ற நிலையில், அதற்கான விலை, அறிமுக தேதி குறித்த அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.

ஆப்பிள் ஐபோன்

ஸ்மார்ட் போன் உலகில் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கேற்றவாறு தயாரிப்புகளை அளிக்கும் ஆப்பிள் நிறுவனம் கடந்த நாட்களில் ஐபோன் 13 சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்திருந்தது. அந்த வகையில் வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த ஆப்பிள் ஐபோன் 13 சீரிஸின் வெளியீடு குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 13 வெளியீட்டு நிகழ்வை இன்று (செப்டம்பர் 14) நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை தேர்தல் – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

இந்த அறிமுக நிகழ்வை இந்தியாவில் உள்ள பயனர்கள் இரவு 10:30 மணியளவில் பார்க்க முடியும். இந்த நிகழ்வில், ஐபோன் அறிமுகத்துடன் ஆப்பிள் நிறுவனம் பல தயாரிப்புகளை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் ஐபோன்கள் 13 மினி, ஐபோன் 13, ஐபோன் 13 ப்ரோ மற்றும் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட நான்கு மாடல்களில் வெளிவர இருக்கிறது. ஆனால் இந்தியாவில் ஐபோன் 13 சீரிஸ் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து எந்தவித உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை.

இதற்கு முன்னதாக ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 14 அன்று தொடங்கப்பட்ட நிலையில் அவை அக்டோபர் 30 அன்று விற்பனைக்கு வந்தது. அந்த அடிப்படையில் ஐபோன் 13 சீரிஸ் இந்த மாத இறுதிக்குள் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதன் விலை விவரங்களை பொருத்தளவு, ஐபோன் 12 சீரிஸின் அதே விலை வரம்பில் கிடைக்கும் என்று தெரிகிறது. ஐபோன் 12 சீரிஸ் ரூ.79,900 என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேசமயம் ஐபோன் 12 ப்ரோ ரூ .1,19,900 க்கும், ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் ரூ .1,29,900 எனவும் விற்பனை செய்யப்பட்டது.

TNPSC போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி – அறிவிப்பு வெளியீடு!

ஆனால் இந்தியாவில், அனைத்து புதிய ஐபோன்களும் தற்போது விலை உயர்வை கண்டு வருவதால், ஐபோன் 13 சீரிஸும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்போது ஆப்பிளின் சமீபத்திய ஐபோன் 13 சீரிஸ்களை வாடிக்கையாளர்கள் ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் வழியாக எளிதில் பெற்றுக்கொள்ள முடியும். இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட சமீபத்திய அறிவிப்பில், ஐபோன் 13 சீரிஸ் மற்றும் பிற ஆப்பிள் சாதனங்கள் ஆன்லைன் தளங்கள் வழியாக விற்பனைக்கு வரும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!