தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள் தொடக்கம் – அறிவிப்பு வெளியீடு!

0
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள் தொடக்கம் - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள் தொடக்கம் - அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் 26 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள் தொடக்கம் – அறிவிப்பு வெளியீடு!

தமிழகத்தில் முதற்கட்டமாக 26 இடங்களில் தகைசால் பள்ளிகள் தொடங்க இருந்தாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்களின் கல்வி தரம் மேம்படுத்தப்படும் என்று அரசு சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு:

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போதைய அரசு தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பல புதிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மாணவர்களின் கல்வி தரம் உயர்த்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதாவது, தமிழகத்தில் பள்ளி குழந்தைகளுக்கு என்றே காலை சிற்றுண்டி திட்டம், ஊட்டச்சத்து உணவு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி திறனை தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதற்காக தமிழகத்தில் முதற்கட்டமாக 26 மாவட்டங்களில் தகைசால் பள்ளிகள் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனை தவிர மாணவர்களுக்கு புதிய அணுகுமுறையில் பாடம் நடத்த ஏதுவாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன. இதையடுத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப்பண்பு பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது அரசு அறிவித்துள்ள தகைசால் பள்ளிகள் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் விதமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிருக்கான சிறப்பு குழு – அரசாணை வெளியீடு!

இத்தகைய பள்ளிகளில் அனைத்து வசதிகள் கொண்ட நூலகம் மற்றும் கடமை உணர்வோடு பணியாற்றும் நூலக ஆசிரியர்கள் கொண்டு மாணவர்களுக்கு புத்தக வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதேபோல் விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் முன்னேற்றத்தை உருவாக்கி மனநலமும், உடல் நலமும் பேணப்படும். கலைகள், நாடகங்கள் மற்றும் இசை ஆகியவற்றில் போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களின் தன்னம்பிக்கையும் வெளிப்பட்டு திறனும் வளர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் காலங்களில் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த கல்வியாண்டில் சென்னை, மதுரை, திருப்பத்தூர், நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகள் மாதிரி பள்ளிகளாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!