தமிழகத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிருக்கான சிறப்பு குழு – அரசாணை வெளியீடு!

0
தமிழகத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிருக்கான சிறப்பு குழு - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிருக்கான சிறப்பு குழு - அரசாணை வெளியீடு!
தமிழகத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிருக்கான சிறப்பு குழு – அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சுயதொழில் பயிற்சி வழங்குதல் ஆகியவற்றை ஏற்படுத்தி தரும் வகையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மகளிர் நல வாரியம்

தமிழகத்தில் பெண்களுக்கென்று பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தற்போது மாணவிகளுக்கு உதவி புரியும் வகையில் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் “புதுமைப்பெண்” என்ற பெயரில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் இளங்கலை படிப்பில் சேரும் மாணவிகள் பயன்பெற முடியும். இதனால் ஏழை எளிய மாணவிகள் தங்களின் கல்வி மேற்படிப்பை தடையின்றி தொடர முடியும். இது போன்ற பல்வேறு வகையான திட்டத்தை பெண்களின் நலன் கருதி தமிழக அரசு செயற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் முதியவர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிர்காலத்தில் பல்வேறு வகையான பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இவர்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு ஒரு அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் பெட்ரோல்,டீசல் தட்டுப்பாடு – வாகன ஓட்டிகள் அவதி!

மேலும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் தற்போது உள்ள சமூக நல வாரியம் கலைக்கப்பட்டு அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்துடன் இணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரியம் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கலந்தாலோசித்து தீர்வு காணும் வகையில் செயல்படும். மேலும் இந்த அமைப்பு இவர்களின் வாழ்வாதாரத்திற்கு உரிய கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, சுய உதவிக் குழுக்கள் அமைப்பது, தொழிற்பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!