வெளிநாட்டில் வேலை தேடுவோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு!

0
வெளிநாட்டில் வேலை தேடுவோர் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு!
வெளிநாட்டில் வேலை தேடுவோர் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு!
வெளிநாட்டில் வேலை தேடுவோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு!

தமிழகத்தில் வெளிநாடுகளில் வேலைக்கு செல்ல விரும்புவோர் அரசால் உருவாக்கபட்ட அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வேலை வெளிநாட்டு வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை:

உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக வெளிநாடுகளில் பணிபுரிந்தோர் தங்கள் வேலைகளை இழந்து தங்களின் தாயகத்திற்கு திரும்பினர். மேலும் கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு நாடுகள் பணியாளர்களுக்கு காலவரையற்ற விடுப்பையும் வழங்கியது. தற்போது தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா ஓரளவு குறைந்து வருவதால் மீண்டும் வெளிநாடுகளுக்கு மக்கள் வேலைக்கு செல்ல துவங்கி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு பணிக்கு செல்ல விரும்புவோர் வேலைவாய்ப்புகள் குறித்த தகவல்களை அரசின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

MOURI Tech நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – 3 ஆண்டுகளில் திட்டம்!

இவர் குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வெளிநாட்டில் பணிபுரிய விருப்பமுள்ள அங்கீகரிக்கபடாத தனியார் முகவர்களிடம் ஏமாறுவதை தவிர்க்கவும். பணம் பறிக்கும் முகவர்களிடம் இருந்து காப்பாற்றவும் தமிழக அரசு அயல்நாட்டு நிறுவன வேலைவாய்ப்பு நிறுவனத்தை தோற்றுவித்தது. இந்த அமைப்பின் மூலம் தமிழகத்தில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் அரசு வெளிநாடுகளில் பணிக்கு செல்ல நினைப்பவர்களுக்கு தேவையான திறன் பயிற்சிகளை வழங்கி வருகிறது.

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

இதற்கு ஆண்டுதோறும் சுமார் 500 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிந்து கொள்வதற்கும் அந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக அரசால் இணையதளம் தோற்றுவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த இணையதளத்தில் அயல்நாட்டு பணிகள் குறித்த அனைத்து விவரங்களும் இடம் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் பணி தேடுவோர் இந்த இணையதளத்தை பயன்படுத்தி பயன் பெறலாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!