MOURI Tech நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – 3 ஆண்டுகளில் திட்டம்!

0
MOURI Tech நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - 3 ஆண்டுகளில் திட்டம்!
MOURI Tech நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - 3 ஆண்டுகளில் திட்டம்!
MOURI Tech நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – 3 ஆண்டுகளில் திட்டம்!

ஐதராபாத்தை முதன்மை தளமாக கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான MOURI Tech நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 10,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

புதிய வேலைவாய்ப்பு

இந்தியாவில் செயல்பட்டு வரும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் பல புதிய ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டு வருகிறது. அதாவது கொரோனா ஊரடங்கு காலத்தில் நிறுத்தப்பட்ட தொழில்நுட்ப சேவைகளுக்கான தேவைகள் தற்போது அதிகரித்துள்ளது. அந்த வகையில் குறிப்பிட்ட காலத்துக்குள் IT நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, பல மென்பொருள் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை கொடுத்து வருகிறது.

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அந்த வகையில் ஐதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநரான MOURI Tech நிறுவனம், அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 10,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. இதில், நடப்பு நிதியாண்டில் மட்டும் 2,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தற்போது வரை இந்நிறுவனத்தில் 3,500 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். தவிர இந்த நிதியாண்டின் தொடக்கத்திலிருந்து இதுவரை சுமார் 20% ஊழியர்கள் புதிதாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக MOURI தொழில்நுட்ப உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரி அனில் யெரம்ரெட்டி கூறுகையில், ‘கொரோனா தொற்று நிலைமை மிகப்பெரிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நிலையான மற்றும் நெகிழ்வான உறுதிப்பாட்டை செம்மைப்படுத்தவும், அதனை மறுவடிவமைக்கவும் வாய்ப்பளித்தது. சிறிய இந்திய நகரங்களில் IT திறமைக்கான மையங்கள் இன்னும் முழுமையாக உருவாக்கப்படவில்லை. எனவே இந்த நகரங்களில் ஆயிரக்கணக்கான புதிய வேலைகளை சேர்ப்பதன் மூலம் சேவைகளை விரிவாக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பில் வீட்டு வாடகைப்படி – அரசாணை வெளியீடு!

MOURI டெக் நிறுவனம் பல துறைகளுக்கான IT தீர்வுகளை வழங்குகிறது. இது அனுபவம் வாய்ந்த, நடுத்தர முதல் மூத்த நிலை தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் புதிய பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது. தற்போது இந்நிறுவனத்தில் AI, RPA மற்றும் டிஜிட்டல் உருமாற்றம், இதர பிரிவுகளில் தேவைகள் அதிகரித்துள்ளதாக தெரிகிறது. மேலும் தரவு அறிவியல், செயற்கை நுண்ணறிவு (AI), இயந்திர கற்றல் (ML), சைபர் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் ஆட்டோமேஷனுக்கான கிளவுட் தீர்வுகள் போன்ற சமீபத்திய தொழில்நுட்ப பிரிவிலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!