Google பயனர்களுக்கு புதிய அப்டேட் – இனி USB Webcam தேவையில்லை.. ஆண்ட்ராய்டு போன் போதும்!

0
Google பயனர்களுக்கு புதிய அப்டேட் - இனி USB Webcam தேவையில்லை.. ஆண்ட்ராய்டு போன் போதும்!
Google பயனர்களுக்கு புதிய அப்டேட் - இனி USB Webcam தேவையில்லை.. ஆண்ட்ராய்டு போன் போதும்!
Google பயனர்களுக்கு புதிய அப்டேட் – இனி USB Webcam தேவையில்லை.. ஆண்ட்ராய்டு போன் போதும்!

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஆண்ட்ராய்டு போனை USB வெப்கேமாக பயன்படுத்தும் வகையிலான புதிய அம்சத்தை பயனர்களுக்கு வழங்கவுள்ளது. இந்த முறை விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

USB வெப்கேம்:

வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில் அனைத்தும் ஆன்லைன் மயமாகிவிட்டது. அதற்கேற்றவாறு ஐடி நிறுவனங்களும் புதிய அப்டேட்டுகளை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் உலகின் பிரபல நிறுவனமான கூகுள் ஆண்ட்ராய்டு மொபைல் வாயிலாக USB வெப்கேம் பயன்படுத்தும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ஆரம்பத்தில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்களில் வெப் கேமரா இருந்தால் மட்டுமே வீடியோ மூலம் பிறருடன் பேச முடியும்.

மாற்றப்பட்ட விலை பட்டியல்.. பால் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு – அதிர்ச்சியில் Amul வாடிக்கையாளர்கள்!!

ஆனால் கொரோனா காலகட்டத்தில் ஆண்ட்ராய்டு போனை USB webcam-ஆக பயன்படுத்தும் பழக்கம் அதிகரித்தது. ஆனால் அதற்கு third-party app ஒன்றை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இந்நிலையில் கூகுள் third-party app எதுவும் இல்லாமல் ஆண்ட்ராய்டு மொபைலை USB வெப்கேமாக பயனபடுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்கு நீங்கள் மற்ற செயலிகளின் உதவியை நாட வேண்டியதில்லை. அதற்கு ‘DeviceAsWebcam’ என்ற புதிய ஆஃப்ஷன் ஆண்ட்ராய்டு போனில் புகுத்தப்பட வேண்டும். கூகுளின் இந்த முயற்சியால் இனி எந்த ஒரு செயலி இன்றியும் Android சாதனங்களை USB Webcam-ஆக பயன்படுத்தி தடையற்ற வீடியோ அழைப்புகளை பெறலாம். விரைவில் இந்த வசதி பயனர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!