யூனியன் பட்ஜெட் 2022 – மாத சம்பளம் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பு என்னென்ன? ஒரு அலசல்!

0
யூனியன் பட்ஜெட் 2022 - மாத சம்பளம் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பு என்னென்ன? ஒரு அலசல்!
யூனியன் பட்ஜெட் 2022 - மாத சம்பளம் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பு என்னென்ன? ஒரு அலசல்!
யூனியன் பட்ஜெட் 2022 – மாத சம்பளம் வாங்குபவர்களின் எதிர்பார்ப்பு என்னென்ன? ஒரு அலசல்!

மத்திய அரசு 2022ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்ய உள்ள நிலையில் மாத சம்பளம் வாங்குபவர்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

2022 பட்ஜெட்:

மத்திய அரசு பிப்ரவரி 1ம் தேதியான இன்று 2022ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. மத்திய அரசின் புதிய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். அரசின் பட்ஜெட் தாக்குதலுக்கு பிறகு நாட்டில் பல மாறுதல்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதனால் மாத ஊதியம் பெறும் நபர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்று தற்போது பார்க்கலாம். அதிலும், முக்கிய செலவினங்களின் வரி விலக்கு போன்ற அறிவிப்புகள் குறித்து மக்கள் அதிகம் எதிர்பார்க்கின்றனர்.

TN Job “FB  Group” Join Now

வரும் 2022 – 2023ம் நிதியாண்டில் வீட்டில் இருந்து பணியாற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. தற்போதைய கொரோனா கால சூழ்நிலையில் அதிக அளவிலான ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதையே விரும்புகின்றனர். இதனால் ஊழியர்களுக்கு கூடுதலாக ஏற்படும் மின்சாரம், இணையம் போன்றவற்றிற்கான செலவுகளை ஈடுகட்ட வரிச்சலுகை அளிக்கலாம். இதனால் செலவுகளை குறைத்து அதன் மூலம் மிச்சமாகும் பணத்தை வேறு வகையில் சேமிக்க முடியும் என்றும், மாதத்துக்கு ரூ.5 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை வரிச்சலுகை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது.

இரவு 11 மணிமுதல் காலை 5 மணிவரை மீண்டும் இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

இதன்படி வீட்டிலிருந்தே பணிபுரிபவர்கள் 80சி படிவம் மூலம் ரூ.50 ஆயிரம் வரை விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் மருத்துவச் செலவு, வீட்டுச் செலவு போன்றவையும் அதிகரித்துள்ளது. குழந்தைகளுக்கான கல்விச் செலவும் உள்ளன. ஆதலால், வருமானத்தில் நிலையான கழிவு ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரி்க்கை இருக்கிறது. தங்கமகள் சேமிப்புத் திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.1.50 லட்சத்துக்கு 80சி விலக்கு பெறலாம். அதேபோல கல்விக்கான செலவிலும் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் அளவுக்கு விலக்கு தேவை என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!