சத்தமே இல்லாமல் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் செய்த சாதனை – வியப்பில் ரசிகர்கள்!

0
சத்தமே இல்லாமல் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் செய்த சாதனை - வியப்பில் ரசிகர்கள்!
சத்தமே இல்லாமல் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் செய்த சாதனை - வியப்பில் ரசிகர்கள்!
சத்தமே இல்லாமல் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் செய்த சாதனை – வியப்பில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் 1000 எபிசோடுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் வெற்றிவிழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட நிலையில், அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

தற்போது பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும், விஜய் டிவி சீரியல்கள் என்றால் அதற்கு தனி மவுசு குறையாமல் இருக்கிறது. அந்த வகையில் விஜய் டிவியின் டாப் வரிசையில் இருக்கும் சீரியல்களில் ஒன்று தான் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தில் இருக்கும் அண்ணன் தம்பிகள் குடும்பத்தில் எவ்வளவு பிரச்சனை வந்தாலும் ஒற்றுமையாக இருப்பது பற்றியே கதை அமைந்துள்ளது.

மேலும் நடுத்தரக் குடும்பத்து மக்கள் வாழ்க்கையில் பணத்தை எப்படி சேமித்து முன்னேறுகின்றனர் என்பதை இந்த சீரியல் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இந்த சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் ஸ்டாலின் முத்து, சுஜிதா, வெங்கட், ஹேமா, காவ்யா, குமரன், சரவண விக்ரம், சாய் காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக 1000வது எபிசோடை கடந்துள்ளது.

தமிழகத்தில் நாளை (செப்.17) இந்த பகுதிகளில் Power Cut – முழு விவரம் இதோ!

Exams Daily Mobile App Download

அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் 1000வது எபிசோட் வெற்றிவிழா நேற்று நடைபெற்றது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். மேலும் விஜய் டிவியில் ஒரே சீசனில் 1000 எபிசோடுகளை நெருங்கிய ஒரே சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ் தான். அதனால் ஏகப்பட்ட ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நெகட்டிவ் ரோல் இல்லாமல் 1000 எபிசோடுகளை கடந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழுவிற்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!