விஜய் டிவி ‘பிக் பாஸ்’ பாவனிக்கு ஆறுதல் சொன்ன அமீர் – இதற்காக தானா? வைரலாகும் பதிவு!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' பாவனிக்கு ஆறுதல் சொன்ன அமீர் - இதற்காக தானா? வைரலாகும் பதிவு!
விஜய் டிவி 'பிக் பாஸ்' பாவனிக்கு ஆறுதல் சொன்ன அமீர் - இதற்காக தானா? வைரலாகும் பதிவு!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ பாவனிக்கு ஆறுதல் சொன்ன அமீர் – இதற்காக தானா? வைரலாகும் பதிவு!

சமீபத்தில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர் பாவனி தனது திருமண வீடியோவை ஒரு சில கேப்ஷனுடன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட, அந்த வீடியோவை கண்ட அமீர், பாவனிக்கு ஆறுதல் சொல்லி வெளியிட்ட பதிவு வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் பாவனி

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான ‘பிக் பாஸ்’ சீசன் 5 கடந்த சில நாட்களுக்கு முன்னாக முடிவடைந்தது. வழக்கம் போல இந்த முறையும் பல்வேறு கலாட்டாக்கள், சர்ச்சைகள், சண்டைகள் என களம் கண்டு வந்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக ராஜு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிகழ்ச்சியின் பார்மேட் படி ஒருவர் மட்டுமே ‘பிக் பாஸ்’ டைட்டிலை வென்றிருந்தாலும், மக்களின் மனம் கவர்ந்த ஒவ்வொருவரும் வெற்றியாளர்களாக பார்க்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ‘பிக் பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் மக்களின் நாயகியாக பார்க்கப்பட்ட ஒரு போட்டியாளர் என்றால் அது பாவனி ரெட்டி தான்.

“பாக்கியலட்சுமி” சீரியலில் ராதிகாவிற்கு திருமணம், கோபிக்கு அம்மா வைத்த செக் – அடுத்து வரும் ட்விஸ்ட்!

தெலுங்கை தாய் மொழியாக கொண்ட நடிகை பாவனி ரெட்டி, தமிழ் மொழியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களின் எக்கச்சக்கமான ஆதரவை பெற்றிருக்கிறார். இந்த சீசனில் நாணயம் திருடுதல், காதல் கிசுகிசு என அதிகம் பேசப்பட்ட சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கிய பாவனி போட்டியின் இறுதி வரை தாக்குப்பிடித்து 3வது இடத்தை பெற்று சாதனை நிகழ்த்தி இருந்தார். தொடர்ந்து ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகை பாவனி தற்போது தனிமைப்படுத்தலில் இருந்து வருகிறார்.

விவகாரத்திற்கு பின் மீண்டும் இணையும் சமந்தா, நாக சைதன்யா ஜோடி? ரசிகர்கள் குழப்பம்!

இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பாவனி சமீபத்தில் ஒரு லைவ் சேட் மூலம் ரசிகர்களுடன் உரையாடி இருந்தார். தொடர்ந்து நடிகை பாவனி, மறைந்த காதல் கணவர் பிரதீப் உடன் நடைபெற்ற திருமண வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டா ஸ்டோரி பக்கத்தில் ஷேர் செய்து, இது போன்று மீண்டும் வாழ வேண்டும் என்று ஏக்கமாக குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவை கண்ட ரசிகர்கள் பலரும் பாவனிக்கு தங்களது ஆறுதலை தெரிவித்து வர ‘பிக் பாஸ்’ போட்டியாளர் அமீரும் தைரியமாக இருங்கள் பாவனி என்று தனது ஆறுதலை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த பதிவு தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!