ஆக்.4 முதல் Amazon Great Indian விற்பனை – குவிய இருக்கும் ஆபர்கள்!

0
ஆக்.4 முதல் Amazon Great Indian விற்பனை - குவிய இருக்கும் ஆபர்கள்!
ஆக்.4 முதல் Amazon Great Indian விற்பனை - குவிய இருக்கும் ஆபர்கள்!
ஆக்.4 முதல் Amazon Great Indian விற்பனை – குவிய இருக்கும் ஆபர்கள்!

அமேசான் ஆன்லைன் வணிக தளத்தின் பண்டிகை கால சிறப்பு விற்பனையான தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2021 வரும் அக்டோபர் 4ம் தேதி முதல் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண்டிகை கால விற்பனை:

இந்தியாவின் நம்பர் 1 ஆன்லைன் வணிக தளம் அமேசான் ஆகும். அமேசானில் விற்பனைக்கு இல்லாத பொருட்களே எனலாம். அந்த அளவிற்கு சிறியது முதல் பெரியது வரை அனைத்து பொருட்களும் கிடைக்கும். மேலும், மக்கள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்தே அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் வசதி இருப்பதால் இந்த சேவையை அதிகம் விரும்ப தொடங்கி விட்டனர். அந்த வகையில், அமேசான் நிறுவனம் வருடந்தோறும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையை தொடங்கும். இதன் மூலம் பல சலுகைகள் மக்களுக்கு வழங்கப்படும்.

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு – அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்!

மேலும், அனைத்து பொருட்களுக்கும் குறிப்பிட்ட அளவு தள்ளுபடியும் வழங்கப்படும். இந்த ஆண்டு தி கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் பற்றிய தகவல்களை நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டு விற்பனையில் 75,000-க்கும் மேற்பட்ட உள்ளூர் கடைகள் பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளது. அமேசான் நிறுவனத்தின் இந்தியாவின் துணைத் தலைவர் மணீஷ் திவாரி ஒரு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தி கிரேட் இந்தியன் திருவிழா, உள்ளூர் கடைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர விற்பனையாளர்களின் கொண்டாட்டம். ஊரடங்கு காலத்தில் சிறிய அளவிலான நிறுவனங்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இலவச டோக்கன்கள் – ஆன்லைனிலா?அதிர்ச்சியில் மக்கள்!

இப்பொழுது, புதிதாக பல மொழிகளையும் அமேசான் இணைத்துள்ளது. இருப்பினும் இந்த ஆண்டிற்கான சலுகைகளை பற்றி இன்னும் அறிவிக்கவில்லை. ஆயினும் HDFC வங்கி கிரெடிட் & டெபிட் கார்டுகள் மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடி, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் கட்டணமில்லா EMI இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசான் பே ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு உள்ள வாடிக்கையாளர்கள், விற்பனையின் போது சேரும் போனஸாக ரூ.750 உடன் 5% ரிவார்டு புள்ளிகளும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!