Amazon நிறுவனத்தில் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – டெலிவரி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

0
Amazon நிறுவனத்தில் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - டெலிவரி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!
Amazon நிறுவனத்தில் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - டெலிவரி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!
Amazon நிறுவனத்தில் 1.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – டெலிவரி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு!

உலகளவில் முன்னணி இடத்தை வகித்துள்ள இ-காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனம் வரும் நாட்களில் சுமார் 1.25 லட்சம் ஊழியர்களை பணியமர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தவிர டெலிவரி ஊழியர்களுக்கான ஊதியத்தையும் உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வேலை வாய்ப்புகள்

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான் தனது நிறுவனத்தில் 1.25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ஆரம்ப ஊதியத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பின் கீழ், அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்க்கும் டெலிவரி ஊழியர்களுக்கு (ஒரு மணி நேரத்திற்கு) சராசரியாக ரூ.1,300 வரை தொடக்க ஊதியத்தை அதிகரித்துள்ளது.

Covaxin தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – செப்டம்பர் இறுதிக்குள் ஒப்புதல்!

மேலும் 1,25,000 கிடங்கு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் உலகின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான அமேசான், ஊழியர்களுக்கு ரூ.2,19,000 வரை போனஸை வழங்குகிறது என்று அமேசான் டெலிவரி சர்வீசஸின் துணைத்தலைவர் டேவ் போஸ்மேன் குறிப்பிட்டுள்ளார். இந்த ஊதிய உயர்வு அதிக ஊழியர்களை கவருவதற்காக அறிவிக்கப்பட்டவை என தகவல்கள் கூறுகிறது.

அமேசான் நிறுவனத்தை போலவே, வால்மார்ட் நிறுவனமும் சமீபத்தில் தனது டெலிவரி ஊழியர்களுக்கான ஊதியத்தை சராசரியாக ரூ.1,197 வரை அறிவித்தது. ஆனால் அமேசான் தனது 15 மணி நேர அடிப்படை ஊதியத்தை பராமரிக்கும் என்று டேவ் போஸ்மேன் கூறியுள்ளார். இதற்கிடையில் அமேசான் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட தளவாட வசதிகளை இயக்க புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது.

15 முதல் 18 வயதுடையோருக்கு கொரோனா தடுப்பூசி தயார் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இதை தொடர்ந்து இந்த நிறுவனம் வரும் அக்டோபர் மாதத்தில் கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் கிடங்கிற்கு 2,200 புதிய விண்ணப்பதாரர்களை எதிர்பார்ப்பதாக மனித வள மேலாளர் நிக்கோல் பிலிச் தெரிவித்துள்ளார். இது தவிர அமேசான் நிறுவனம் உலகளவில் 55,000 தொழில்நுட்ப மற்றும் கார்ப்பரேட் வேலைகளுக்கு ஆட்சேர்ப்பு பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!