விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா? ஷாக் ரிப்போர்ட்! ரசிகர்கள் கவலை!

0
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா? ஷாக் ரிப்போர்ட்! ரசிகர்கள் கவலை!
விஜய் டிவி 'பிக் பாஸ்' வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா? ஷாக் ரிப்போர்ட்! ரசிகர்கள் கவலை!
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய அக்ஷரா? ஷாக் ரிப்போர்ட்! ரசிகர்கள் கவலை!

விஜய் டிவி ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்காக நடத்தப்பட்டு வரும் வோட்டிங்கில் போட்டியாளர் அக்ஷரா மிக குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை வெளியேற வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.

பிக்பாஸ் அக்ஷரா

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ‘பிக்பாஸ்’ சீசன் 5 நிகழ்ச்சி 80 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக பயணித்து வருகிறது. வழக்கத்தை போல இல்லாமல் இந்த வருடம் கொரோனா தொற்றால் மிகவும் தாமதமாக துவங்கப்பட்ட இந்த ‘பிக்பாஸ்’ சீசன் பலத்த எதிர்பார்ப்புகளுடன் ஆரம்பித்தது. அந்த வகையில் சில தெரிந்த மற்றும் பல தெரியாத முகங்களுடன் ஆரம்பித்த ‘பிக்பாஸ்’ சீசன் 5 இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வர இருக்கிறது.

தன் கர்ப்பத்தை பற்றி கூற பயந்த ‘ராஜா ராணி 2’ சீரியல் ஆல்யா – இயக்குனரின் ஓபன் டாக்!

இந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை 13 பேர் வெளியேற்றப்பட்டு தற்போது 10 பேர் மட்டும் போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் ப்ரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியாளர்களை காண்பதற்காக அவர்களது குடும்பத்தினர் பிக்பாஸ் வீட்டிற்கு வருகை தர இந்த வார நிகழ்ச்சி களை கட்டியது. இதற்கிடையில் இந்த வாரதிற்கான எபிசோடுகள் முடிவடைந்த நிலையில் அடுத்ததாக எவிக்ஷன் ப்ராசஸ் பக்கம் ரசிகர்களின் கவனம் திரும்பி இருக்கிறது.

Vijay TV BIGG BOSS வீட்டில் இருந்து 5 லட்சம் பணத்துடன் வெளியேறியது இவர் தானா? ரசிகர்கள் ஷாக்!

அந்த வகையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவதற்கான நாமினேஷனில் ப்ரியங்கா, பாவனி, நிரூப், சிபி, அக்ஷரா மற்றும் வருண் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதற்கான வோட்டிங் ப்ராசஸ் நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாளும் வாக்குகளின் விகிதம் மாறிக் கொண்டிருக்கிறது. என்றாலும் இந்த எவிக்ஷன் ப்ராசஸில் மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ள சிபி, வருண், அக்ஷரா ஆகியோரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்சமயம் வெளிவந்துள்ள தகவலின் படி, போட்டியாளர் அக்ஷரா தான் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here