‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகிலன் ரீஎன்ட்ரி? வெண்பாவுடன் ஜோடி போட்ட பாரதி – வெளியான புகைப்படம்!

0
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அகிலன் ரீஎன்ட்ரி? வெண்பாவுடன் ஜோடி போட்ட பாரதி - வெளியான புகைப்படம்!
'பாரதி கண்ணம்மா' சீரியலில் அகிலன் ரீஎன்ட்ரி? வெண்பாவுடன் ஜோடி போட்ட பாரதி - வெளியான புகைப்படம்!
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் அகிலன் ரீஎன்ட்ரி? வெண்பாவுடன் ஜோடி போட்ட பாரதி – வெளியான புகைப்படம்!

விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து சமீபத்தில் விலகிய நடிகர் அகிலன், அருண் பிரசாத் மற்றும் பரினாவுடன் இணைந்து எடுத்துள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாக அகிலன் மீண்டுமாக சீரியலில் இணைந்துள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது.

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த ஒரு முக்கியமான கதைக்களம் வெகு விரைவில் வெளியாக இருக்கிறது. அதாவது, ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் பாரதியும், கண்ணம்மாவும் பிரிந்ததற்கு பிறகு இருவரும் இணைய வேண்டும் என அவர்கள் நினைத்ததை விட ரசிகர்கள் தான் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பாரதியும், கண்ணம்மாவும் இணையும் அந்த நாளுக்காக தான் பலரும் இந்த சீரியலையே பார்த்து வருகின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் வரப்போகும் ட்விஸ்ட் – லட்சுமி அம்மா இறப்பிற்கு அடுத்த எபிசோடுகள்!

அந்த வகையில் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் சமீபத்திய காட்சிகள் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவை வெறுக்கும் பாரதி, லட்சுமியை மட்டும் ஏற்றுக்கொள்கிறார். அதே போல அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பது போல பாரதிக்கும் அவ்வப்போது கண்ணம்மா மேல் ஒரு நல்ல எண்ணம் வருகிறது. இதனால் இருவரும் இணையும் காலம் கைகூடும் என தெரிகிறது.

குடும்பத்துடன் சினிமாவிற்கு செல்ல திட்டமிடும் சரவணன், பாஸ்கரை சந்திக்க செல்லும் பார்வதி – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!!

இந்நிலையில் ‘பாரதி கண்ணம்மா’ தொடரில் அகில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் அகிலன், பாரதி மற்றும் வெண்பாவுடன் இணைந்து எடுத்துக்கொண்ட ஒரு த்ரோ பேக் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது அகிலன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை விட்டு விலகியதும் அவரை மிஸ் செய்து வந்த ரசிகர்கள், இந்த புகைப்படத்தை பார்த்ததும் ஒருவேளை அகிலன் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் இணைந்திருப்பாரோ என்றும் பாரதியும், வெண்பாவும் ஒன்று சேர்ந்தார்களா என்றும் கிளப்பி விட்டுள்ளனர். இந்த தகவல் வலைதளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!