ட்ரோன் மூலம் வான் வழியாக மருந்து விநியோகம் செய்யும் திட்டம் – மத்திய அரசின் புதிய முயற்சி!
முறையான போக்குவரத்து வசதிகள் இல்லாத பகுதிகளுக்கு ட்ரோன் மூலம் வான் வழியாக மருந்து மற்றும் மாத்திரைகளை கொண்டு சேர்க்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய திட்டம்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் பரவல் அதிகமாக உள்ளது. இதற்காக பல வகையிலும் நோய் கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா தொற்று வகையை சேர்ந்த நோயாக உள்ளதால் கட்டுக்குள் வருவது மிகவும் சிக்கலாக உள்ளது. இதனால் அரசு புதிய முயற்சிகளையும் செய்து வருகிறது. அந்த வகையில் முறையான போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கு மருந்துகளை கொண்டு செல்வதற்கும், இரத்த மாதிரிகளை கொண்டு செல்வதற்கும் புதிய முறை கண்டறியப்பட்டுள்ளது.
ரயில் பெட்டிகள் தனியாருக்கு குத்தகை, விற்பனை – மத்திய ரயில்வே துறை திட்டம்!
அந்த வகையில், Medicine-from-the-Sky’ என்ற புதிய திட்டம் ஒன்றை மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, ஹைதராபாத் நகரில் தொடங்கி வைத்தார். மேலும், முன்னதாக தெலங்கானா மாநிலம் ட்ரோன் மூலம் மருந்துகளை விநியோகிக்க அனுமதி பெற்றுள்ளது. இந்த ட்ரோன்கள் வழக்கமான ட்ரோன் போல பறக்காமல் Beyond Visual Line of Sight எல்லைக்கு அப்பாற்பட்டு இவை பறக்க உள்ளன. இதன் மூலம், மருந்து, மாத்திரை, ரத்தம் போன்றவை கொண்டு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
TN Job “FB
Group” Join Now
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா அவர்கள், இந்தியா உலகளவில் ட்ரோன் தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை மேற்கொள்ளும். அதற்கு இது முதல் படியாக இருக்கும் என்று அறிவித்தார். மருந்து மாத்திரைகளை விநியோகிக்க ட்ரோன் பயன்படுத்த படுவது இதுவே முதல் முறை ஆகும் என்று கூறினார். முதல்கட்டமாக சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் ட்ரோன் மூலம் ஒத்திகை பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.