ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் – AICTE வலியுறுத்தல்!

0
ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் - AICTE வலியுறுத்தல்!
ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் - AICTE வலியுறுத்தல்!
ஆன்லைனில் தேர்வுகள் நடத்த வேண்டும் – AICTE வலியுறுத்தல்!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் KTU பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் நேரடி முறையிலான தேர்வுகளை, ஆன்லைன் மூலம் நடத்த AICTE வலியுறுத்தியுள்ளது. எனினும் KTU பல்கலைக்கழகம் திட்டமிட்டபடி, ஜூலை 9 முதல் நேரடி முறையில் தேர்வுகளை நடத்தி வருகிறது.

ஆன்லைன் தேர்வுகள்

கேரளாவில் செயல்பட்டு வரும் APJ அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்துக்கு (KTU) அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE) அனுப்பியுள்ள செய்தியால் பல்கலைக்கழக தேர்வுகளை நடத்துவதில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் ஆன்லைன் வழியாக தேர்வுகளை நடத்துவதற்காக AICTE பரிந்துரைத்திருக்கும் பட்சத்தில், ஜூலை 9 ஆம் தேதி முதல் KTU பல்கலைக்கழக மாணவர்களுக்கான தேர்வுகள் நேரடி முறையில் நடைபெற்று வருகிறது.

ஜூலை 16ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை – கொரோனா தடுப்பு!

இது தொடர்பாக மத்திய கல்வி அமைச்சருக்கு MP கொடிக்குன்னில் சுரேஷ் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், APJ அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் நேரடி முறையிலான தேர்வுகளை ரத்து செய்யவும், கேரளாவில் கொரோனா தொற்று நெருக்கடி மற்றும் தீவிரத்தன்மை காரணமாக அதற்கான மாற்று வழியை உருவாக்க வேண்டும் என்று AICTE அறிவுறுத்தியது. மறுபக்கத்தில் பிடெக் மாணவர்கள் பலர் தேர்வுகளை நடத்துவதற்கு தங்களது ஆட்சேபனைகளை தெரிவித்து வந்தனர்.

இதை கவனித்த சட்டப்பூர்வ அமைப்பு, தேர்வு எழுதும் பல மாணவர்கள் இதுவரை கொரோனா தடுப்பூசி போடவில்லை எனவும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மாணவர்கள் தேர்வுக்கு வருவதில் சிக்கல்களை சந்தித்ததாகவும் கூறியது. மேலும் கேரளாவில் கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பானது 5% க்கும் குறையாமல் காணப்படுவதால் நேரடி முறையிலான தேர்வுகள் பாதுகாப்பானது அல்ல என்று AICTE தெரிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

இருந்தாலும் KTU அறிவித்திருந்தபடி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கான தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள கால அட்டவணையின் படி தொடரும் என்று தெளிவுபடுத்தியது. இது தொடர்பாக KTU துணைவேந்தர் ராஜஸ்ரீ கூறுகையில், ‘நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் நடத்தப்படுவதை போலவே, கடுமையான கொரோனா தடுப்பு விதிமுறைகளின் கீழ் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள முடியாத மாணவர்கள் சிறப்பு தேர்வுகளில் கலந்து கொள்ளலாம். தேர்வுகளை ஒத்தி வைப்பது என்பது கல்வியை பாதிக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!