மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – நடவடிக்கை தீவிரம்!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - நடவடிக்கை தீவிரம்!
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் - நடவடிக்கை தீவிரம்!
மாநில அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – நடவடிக்கை தீவிரம்!

ஜார்க்கண்ட் மாநில அரசுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட இருக்கிறது. இதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வரும் நிலையில் இது பற்றிய கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

பழைய ஓய்வூதிய திட்டம்

சமீப காலமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களிடம் இருந்து எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஈடுபாடு காட்டி வரும் ஜார்க்கண்ட் மாநில அரசு, தனது ஊழியர்களுக்கு தற்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதில் சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானை பின்பற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்போது பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பதற்கான முன்மொழிவு வரைவு செய்யப்பட்டுள்ளதாக ஜார்க்கண்ட் நிதித் துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

தமிழக அரசு பள்ளிகளில் ஜூன் 13 முதல் மாணவர் சேர்க்கை – பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!

இது குறித்து நிதித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நாங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான வரைவு முன்மொழிவுடன் தயாராக இருக்கிறோம். ஜூன் முதல் வாரத்தில் நடைபெறும் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இது தாக்கல் செய்யப்படும்’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், நிதித்துறை முதன்மை செயலர் அஜோய் குமார் சிங், இந்த விவகாரம் குறித்து தற்போது அதிகம் கூற முடியாது என்று இந்த நடவடிக்கை குறித்து பேச மறுத்து விட்டார்.

Exams Daily Mobile App Download

இதற்கு முன்னதாக மார்ச் மாதம் நடைபெற்ற ஜார்க்கண்ட் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளின் போது அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மறுசீரமைப்பது குறித்து சுட்டிக்காட்டினார். மேலும் இந்த பணிகளை தற்போது தொடங்கி இருப்பதாகவும், விரைவில் அதை அறிமுகப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையில், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசுகள் இந்த மாத தொடக்கத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பை வெளியிட்ட பிறகு தற்போது ஜார்க்கண்ட் அரசாங்கமும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here