Instagram பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி ரீல்ஸில் விளம்பரம்!

0
Instagram பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இனி ரீல்ஸில் விளம்பரம்!
Instagram பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு - இனி ரீல்ஸில் விளம்பரம்!
Instagram பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – இனி ரீல்ஸில் விளம்பரம்!

சமூக வலைதள செயலியாக மக்கள் மத்தியில் மிக பிரபலமாக இருந்து வருகிறது இன்ஸ்டாகிராம் தளம். தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.

இன்ஸ்டாகிராம்:

சமூக ஊடகங்களில் மிக பிரபலமாக இருந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது இன்ஸ்டாகிராம் செயலி. இந்த தளத்தில் மீம் கிரியேட்டர்ஸ்கள் பெரிய அளவில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் இந்தியாவில் டிக் டாக் தடை செய்த பின்பு இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது தளத்தை மேம்படுத்தி ரீல்ஸ் என்னும் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் பல கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் 2 நாட்களில் மின் தொடர்பான குறைகள் நிவர்த்தி – அமைச்சர் உறுதி!

இந்த அம்சம் இன்ஸ்டாகிராம் பயனர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அதன்படி ரீல்ஸ் விளம்பரங்களை நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. அந்த வகையில் தனிப்பட்ட ரீல்களுக்கு இடையில் விளம்பரங்கள் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளம்பரங்கள் வணிகர்களுக்கு அதிக பார்வையாளர்களை அடைய உதவக்கூடும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் இந்த விளம்பரங்கள் அனைத்தும் 30 வினாடிகள் வரை இருக்கக்கூடும் என்றும் விளம்பரங்களுக்கு பயனர்கள் தங்கள் கருத்து தெரிவித்தல், சேமிப்பு மற்றும் பகிரும் போன்ற அம்சங்கள் இடம்பெற்றிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரீல்ஸ் விளம்பரத்தை இந்தியா, பிரேசில், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட குறிப்பிட்ட சந்தைகளில் மட்டும் முதற்கட்டமாக சோதனை செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் பயனர்கள் தங்களுக்கு விரும்பாத விளம்பரங்கள் ஏதும் கண்டால் அதனை மறைக்க அல்லது அதுகுறித்த புகார் தெரிவிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!