தமிழகத்தில் இந்த தினங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகங்கள் திட்டம்!

0
தமிழகத்தில் இந்த தினங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து கழகங்கள் திட்டம்!
தமிழகத்தில் இந்த தினங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் - போக்குவரத்து கழகங்கள் திட்டம்!
தமிழகத்தில் இந்த தினங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்து கழகங்கள் திட்டம்!

தமிழகத்தில் தொடர்ந்து சில நாட்கள் விடுமுறை தினங்களாக வந்ததால் சென்னையில் இருந்து வெளி ஊர்களுக்கு செல்லும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனை தொடர்ந்து வரும் விடுமுறை தினங்களில் கூடுதலாக 1000 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளன.

கூடுதல் பேருந்துகள்

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் முழு ஆண்டு தேர்வு நடைபெற இருக்கிறது. மேலும் கடந்த வார இறுதியில் புனித வெள்ளி காரணமாக 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனால் வெளி ஊர்களுக்கு பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. அந்த வகையில் இந்த வாரம் ஏப்ரல் 14 தமிழ் வருடப்பிறப்பு, ஏப்ரல் 22 ரம்ஜான் பண்டிகை ஆகியவை வர இருக்கிறது. அதனால் வெளி ஊர்களுக்கு பயணம் செய்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய திட்டம் – ரூ. 1,500 கோடி வரை முதலீடு.. வெளியான அசத்தல் தகவல்!

அதன் காரணமாக சென்னையில் இருந்து கூடுதலாக 1000 பேருந்துகளை இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளனர். அதன் படி தமிழ் வருடப்பிறப்பு அன்று 13 ஆம் தேதி வியாழக்கிழமை 500 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏப்ரல் 22 ரம்ஜான் காரணமாக ஏப்ரல் 21 ஆம் தேதி 500 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு சேலம், விழுப்புரம், கோவை, கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகங்கள் மூலம் வழக்கமாக இயக்கப்படும் 2100 பஸ்களை விட கூடுதலாக 500 பேருந்துகள் இயக்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!