பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய வரவாக நடிகை தேஜஸ்வினி அறிமுகம்? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் புதிய வரவாக நடிகை தேஜஸ்வினி அறிமுகம்? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!
பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் புதிய வரவாக நடிகை தேஜஸ்வினி அறிமுகம்? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய வரவாக நடிகை தேஜஸ்வினி அறிமுகம்? ஷாக்கிங் ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ சீரியல் நடிகை தேஜஸ்வினி புதிதாக அறிமுகம் செய்யப்படுவதை போல வெளியாகி இருக்கும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரை தொடர்களில் குடும்ப ஆடியன்ஸை அதிகம் பெற்றிருக்கும் ஒரு முன்னணி சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் சுமார் 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நடைபெறும் நிகழ்வுகள் எல்லாம், ஒரு கூட்டு குடும்பத்தில் நடைபெறும் வழக்கமான விஷயங்களை மையமாக கொண்டிருப்பதால், இதற்கு எப்போதுமே மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகள் கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் தற்போதைய கதைக்களம் கஷ்டப்பட்டு, உழைத்து சம்பாதித்த கடையை மீட்க அண்ணன், தம்பிகள் அனைவரும் குடும்பமாக இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவது போல வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய வரவாக பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை தேஜஸ்வினி நடிக்க இருப்பதை போல எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.

அந்த ப்ரோமோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திற்கு புதிய வரவாக தேஜஸ்வினி அறிமுகம் செய்யப்படும் காட்சிகள் இன்னும் 2 நாட்களில் 3 மணி நேர எபிசோடாக வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது வெறும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோவாக இருந்தாலும், இப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சில மாற்றங்கள் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இப்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிய அறிமுகமாக ப்ரோமோவில் இடம்பிடித்துள்ள நடிகை தேஜஸ்வினி, ஜீ தமிழின் ‘வித்யா நம்பர்.1’ என்ற சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!