நடிகை ஷகிலாவின் உடல்நிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல் – அவரே அளித்த விளக்கம்!
பிரபல மலையாள நடிகையான ஷகிலா மற்றும் அவரது உடல்நிலை குறித்து தவறான வதந்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. அதற்கு விளக்கம் அளித்து தற்போது அவர் வீடியோ ஒன்றினை வெளியிட்டு உள்ளார்.
இணையத்தில் பரவிய வதந்தி:
மலையாளம், தமிழ், கன்னடம் மற்றும் பிற மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை தான், ஷகிலா. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாள திரைப்படங்களில் அறிமுகமாகி நடித்து வந்தார். இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றது. ஆரம்பத்தில் இவர் கவர்ச்சி வேடங்களில் நடித்தாலும், பின்னர் இவர் குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்படியாக இருக்க, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றிருந்தார்.
நடிகை யாஷிகா ஆனந்தின் தற்போதைய நிலை – ICU வில் இருந்து மாற்றம்!
இவரது சமையல் திறன் கண்டு பலரும் இவரை பாராட்டி வந்தனர். அதே போல் அந்த நிகழ்ச்சியில் இருக்கும் அனைத்து கோமாளிகளுக்கும் மிரட்டும், அதே சமயம் அன்பு காட்டும் அம்மாவாக இருந்தார். “குக் வித் கோமாளி” நிகழ்ச்சி தனக்கு ஒரு நல்ல பெயரை எடுத்து கொடுத்ததாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.
TN Job “FB
Group” Join Now
இந்த சூழலில் இவர் குறித்தும், இவரது உடல் நலம் குறித்தும் பல வதந்திகள் இணையதளத்தில் வெளியாகி வந்தது. இதனை அறிந்த நடிகை ஷகிலா, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், ‘தன்னை பற்றி சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல்கள் முற்றிலும் வதந்தியே. இதனை யாரும் நம்ப வேண்டாம். என்னை பற்றி வதந்தி பரவியதும், பலரும் எனக்கு போன் கால் செய்தனர். அவர்களது அக்கறைக்கும், அன்பிற்கும் நன்றிகள். அதே போல் இந்த வதந்தியை பரப்பியவர்களுக்கும் எனது நன்றிகள். இதன் காரணமாகவே பலர் என் மீது வைத்திருந்த அன்பு பற்றி தெரிந்து கொண்டேன்’ இவ்வாறாக தெரிவித்துள்ளார்.