‘மெல்போர்ன்’ திரைப்பட திருவிழா – சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு! ரசிகர்கள் வாழ்த்து!
மெல்போர்ன் திரைப்பட திருவிழா 2020-21 விருதுகளில், சிறந்த நடிகையாக முன்னணி நடிகை சமந்தா தேர்வு செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிறந்த வெப்சீரிஸ் நடிகை:
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடக்கும் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் திரைப்படங்கள் குறித்த விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிறந்த நடிகைக்கான விருதிற்கு “தி பேமிலி மேன் -2” தொடரில் சிறப்பாக நடித்த சமந்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இந்த வெப் தொடர் சில நாட்களுக்கு முன் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தகுந்தது. இவர் இந்த தொடரில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த வெப்சீரிஸ் நடிகையர் விருது பெற்றுள்ளார்.
இளைஞர்கள் தொழில் தொடங்க அரசு மானியம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
இதனை தொடர்ந்து சிறந்த நடிகையர் விருதினை அதிதி பாலன் அவர்கள் பெற்றுள்ளார்.இ தற்கு அடுத்தபடியாக சிறந்த நடிகர் மற்றும் சிறந்த திரைப்படம் என்ற இரு விருதுகளை வாங்கி குவித்துள்ளது நடிகர் சூர்யாவின் “சூரரைப்போற்று “திரைப்படம். இந்த படம் சூர்யாவின் கம் பேக் படம் என்று ரசிகர்களிடம் பரவலாக பேசப்பட்டது. இந்த படம் சுதா கெங்கரா இயக்கத்தில் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி சாதனை படைத்தது.
TN Job “FB Group” Join Now
இதோடு சேர்த்து “தி பேமிலி மேன் -2” தொடர் சமந்தாவின் திரைப்பட வரலாற்றில் ஒரு மாபெரும் மைல்கல் என்று பேசப்படுகிறது. இந்த நிகழ்வு கொரோனா பரவல் காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெற்றது என்றும், இதில் விருது பெற்ற திரைக்கலைஞர்கள் ஆன்லைன் வழியாக கலந்து கொண்டு விருது வழங்கி பெருமைபடுத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சிறந்த நடிகையாக சமந்தா தேர்வு செய்யப்பட்டமைக்கு ரசிகர்கள் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து வருகின்றனர்.