சன் டிவி “எதிர்நீச்சல்” சீரியலில் என்ட்ரி கொடுத்த புது நடிகை – வர போகும் செம ட்விஸ்ட்!

0
சன் டிவி
சன் டிவி

சன் டிவி “எதிர்நீச்சல்” சீரியலில் என்ட்ரி கொடுத்த புது நடிகை – வர போகும் செம ட்விஸ்ட்!

தமிழ் சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் டாப் சீரியல்களில் ஒன்றான “எதிர்நீச்சல்” சீரியலில் பெரிய திருப்பம் ஒன்று வர இருக்கிறது. அதாவது நடிகை ஹேமா தயாளன் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவர் என்ன ரோலில் நடிக்க இருக்கிறார் என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

எதிர்நீச்சல் சீரியல் ட்விஸ்ட்:

அந்த காலம் முதல் சீரியல் என்றாலே சன் டிவி தான் நியாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு மக்கள் மனதில் நிற்கும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி இருக்கிறது. இந்நிலையில் தற்போது கால மாற்றத்திற்கு தகுந்தாற் போல பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வரும் எதிர்நீச்சல் சீரியல் TRPயில் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவாகவே பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்கள் நல்ல வரவேற்பை பெறும்.

Follow our Instagram for more Latest Updates

அது போல தற்போது எதிர்நீச்சல் சீரியல் பார்க்க பல ரசிகர்கள் இருக்கின்றனர். அனைவருக்கும் விருப்பமான இந்த சீரியலில் வரும் வாரம் செம ட்விஸ்ட் வர இருக்கிறது. இதுவரை குணசேகரன் செய்த கொடுமைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு ஜனனி வாழ்க்கை நடத்திய நிலையில், தற்போது ஜனனி நடத்தையை சக்தி சந்தேகப்பட்டதால் அவர் கணவர் உடன் வாழமாட்டேன் என சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறி செல்கிறார்.

இந்நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் புது நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அதாவது சீரியல் நடிகை ஹேமா தயாளன் எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுப்பது போல ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஒரு வேளை இவர் சக்திக்கு பார்த்த பெண்ணாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் இவரால் சீரியலில் என்ன மாதிரி திருப்பம் வர இருக்கிறது என்பது எல்லாம் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட இருக்கிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!