கல்வி உதவித்தொகையாக ரூ. 2.5 கோடி அறிவிப்பு

0
கல்வி உதவித்தொகையாக ரூ. 2.5 கோடி அறிவிப்பு
கல்வி உதவித்தொகையாக ரூ. 2.5 கோடி அறிவிப்பு

கல்வி உதவித்தொகையாக ரூ. 2.5 கோடி அறிவிப்பு

கல்வி கற்பதற்கு உதவித்தொகையாக ஏழை குடும்பத்தினை சேர்ந்த மாணவ / மாணவிக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதற்காக ரூ. 2.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நடிகர் சூர்யா தற்போது அறிவித்து உள்ளார்.

ஓணம் பண்டிகையினை முன்னிட்டு அவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புது செய்தி குறிப்பினை வெளியிட்டு உள்ளார். அதில், கொரோனா ஊரடங்கு காலத்தில் பல்வேறு நெருக்கடிகள் பல குடும்பங்களுக்கு ஏற்பட்டு உள்ள நிலையில் தற்போது கல்விக்கான தேவையும் ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

மேலும் அவர் நடிப்பில் வெளியாக உள்ள “சூரரை போற்று” திரைப்படம் வெளியீட்டு பணத்தில் 5 கோடி ரூபாயினை நெருக்கடிகளில் சிக்கியுள்ளவர்களுக்கு வழங்கப்படும் என்று ஏற்கனவே தெரிவித்து இருந்தார். அதில் முதற் கட்டமாக 1.5 கோடி ரூபாயினை பொருளாதார நெருக்கடிகளில் சிக்கியுள்ள தனது திரைகுடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தை சேர்ந்த சேர்ந்த மாணவ / மாணவிக்கு மட்டும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அதற்காக ரூ. 2.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

அவரது அகரம் இணைய பக்கத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!