தன் பிறந்த நாள் அன்று ரசிகர்களிடம் மனம் திறந்து பேசிய நடிகர் அஸ்வின் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

0

தன் பிறந்த நாள் அன்று ரசிகர்களிடம் மனம் திறந்து பேசிய நடிகர் அஸ்வின் – நெகிழ்ச்சியில் ரசிகர்கள்!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக புகழை பெற்ற அஸ்வின் தற்போது மிகவும் பிஸியான நடிகராகி விட்டார். இந்நிலையில் தன் பிறந்த நாளை முன்னிட்டு தனது ரசிகர்களிடம் லைவில் பேசியுள்ளார்.

அஸ்வின்:

தனது திறமையை நிரூபித்து மக்கள் மத்தியில் அதிக புகழையும், திரை நட்சத்திரமாக ஜொலிக்க வேண்டும் என்ற ஆசையையும் கொண்ட அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக இருப்பவர் அஸ்வின். கோயம்புத்தூரை சேர்ந்த அஸ்வின் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் போராடி வந்தார். பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு சமீப காலமாக தான் அஸ்வின் வெற்றியின் பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறார்.

தமிழகத்தில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!

விஜய் டிவியில் ரெட்டை வாழ் குருவி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆனார் அஸ்வின். தொடர் வெற்றி அடைந்தாலும் இவருக்கு வாய்ப்புகள் ஏதும் அதன் மூலம் கிடைக்கவில்லை. பல குறும்படங்களில் நடித்து வந்தார். இவை அனைத்தும் தக்க வைக்க முடிந்ததே தவிர புகழை சேர்க்கவில்லை. இறுதியாக குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அப்போது முதல் தமிழக மக்களின் மனம் கவர்ந்த ஒருவராகி விட்டார் என்றே சொல்லலாம்.

இதன் மூலம் கிடைத்த புகழை வைத்து திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்து வருகிறது. இதனால் அஸ்வின் தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மாறி உள்ளார். இந்நிலையில், அஸ்வின் பிறந்த நாளை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடினர். இதனால் தனது ரசிகர்களுக்கு தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக அஸ்வின் நேற்று நேரலையில் வந்து பேசியுள்ளார். அதில் தன்னை பிடித்தவர்களுக்கு நன்றி என்றும், பிடிக்காதவர்களுக்கு இன்னும் சிறப்பாக பணியாற்றி உங்களுக்கும் பிடித்தது போல் இருப்பேன் என்று கூறி உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here