தமிழகத்தில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!

0

தமிழகத்தில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!

தமிழகத்தில் தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலை கடந்த மாதம் முதல் தொடர்ந்து விலை ஏற்றம் அடைந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தனர்.

சமையல் எரிவாயுவின் விலை:

இந்திய நாட்டை பொறுத்த வரையில் சமையல் எரிவாயு அனைத்து இல்லத்தரசிகளுக்கும் ஒன்றாக மாற்றி விட்டது. மேலும் கொரோனா காலகட்டத்தில் இருந்து சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதனை தொடர்ந்து மத்திய அரசால் கொடுக்கப்படும் மானியத் தொகையும் குறைந்து கொண்டே வருகிறது. மேலும் ஒரு சில மக்களுக்கு இந்த மானிய தொகை கிடைக்கவில்லை என்ற புகார்களும் எழுந்து கொண்டே உள்ளது. இது தவிர இவ்வாறு தொடர்ந்து சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்து கொண்டே இருக்கும் காரணத்தால் இல்லத்தரசிகள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர்.

TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – அரசின் புதிய செயலி அறிமுகம்!

இந்த நிலையில் கொரோனா காலத்தில் இருந்து தொடர்ந்து தற்போது வரை சமையல் எரிவாயுவின் விலை ஏற்றமாகி கொண்டு மட்டுமே உள்ளது. ஆனால் பொது மக்கள் இந்த விலை எப்பொழுது குறையும் என்று எதிர்பார்த்து கொண்டே இருந்து வருகின்றனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்பை தவிடுபொடியாகும் வண்ணம் தற்போது மத்திய அரசு மீண்டும் சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்தி உள்ளது. அதாவது 14 கிலோ வீட்டு உபயோக சிலிண்டர் விலை 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை இன்று ரூபாய் 50 மேலும் உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்து உள்ளனர். மேலும் தற்போது வரை தமிழகத்தில் சமையல் எரிவாயுவின் விலை ரூபாய் 965 என்று விற்பனையானது. ஆனால் தற்போது எரிவாயுவின் விலை 1000க்கு மேல் உயர்ந்து உள்ளதால் சாமானிய பொதுமக்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வருகின்றனர். இது தவிர தமிழகத்தில் மட்டுமல்லாமல், டெல்லியில் ரூ.2,346 ஆகவும், மும்பையில் ரூ.2,297.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.2,445.50 ஆகவும், சேலத்தில் ரூ.2,452 ஆகவும் உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here