ஆவின் நூடுல்ஸ் முதல் பாயாசம் மிக்ஸ் வரை – 5 புதிய பால் பொருட்கள்! முதல்வர் அறிமுகம்!
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தால் புதிதாக தயாரிக்கப்பட்ட 5 பால் பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று அறிமுகம் செய்துள்ளார்.
முதல்வர் அறிமுகம்:
தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அல்லது ஆவின் நிறுவனம் என்பது பால் கொள்முதல், பதப்படுத்துதல், குளிரூட்டுதல் மற்றும் விற்பனை ஆகிய பணிகளைச் செய்து வரும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் மூலம் பால், தயிர், வெண்ணெய், நெய், பால் பவுடர், பால்கோவா, மைசூர்பாக், ஐஸ்கிரீம் முதலான பால் உபயோக பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் ஆவின் நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து “பால்” கொள்முதல் செய்யப்பட்டு பாக்கெட்டுகளில் சேமிக்கப்பட்டு ஆவின் பாலங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்தியன் வங்கியில் ரூ.120 கோடி கடன் நிலுவை – பிரைம் சரவணா ஸ்டோர்ஸ் கடை ஜப்தி!
ஆவின் பால் பொருட்களான ஆவின் மைசூர்பா, பால்கோவா, டேட்ஸ் கோவா, குல்பி ஐஸ், மில்ஷேக், பாதாம் பால் பவுடர் உள்ளிட்டவை மற்றும் ஆவின் மோர் மற்றும் தயிர் பாக்கெட்டுகளுக்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் அறிவிப்பின்படி ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டு 43 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் ஆவின் சமன்படுத்தப்பட்ட பால் 40 ரூபாய்க்கும், 21 ரூபாய் 50 காசுகளாக இருந்த அரை லிட்டர் சமன்படுத்தப்பட்ட பால் 20 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
தமிழ்நாடு வருவாய்த்துறையில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
இதனை தொடர்ந்து தற்போது ஆவின் நிறுவனம் 5 புதிய பால் பொருட்களை தயாரித்து உள்ளது. இந்த புதிய தயாரிப்புகள் பிரீமியம் மில்க் கேக், மாம்பழம் – ஸ்ட்ராபெரி சுவையில் யோகர்ட் பானம், பாயாசம் மிக்ஸ் ஆகியவை ஆகும். அந்த வகையில் புதிதாக தயாரிக்கப்பட்ட 5 பால் பொருட்களை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகம் செய்துள்ளார். இதனை தொடர்ந்து பால் புரத நூடுல்ஸ், டெய்ரி ஒயிட்னர் ஆகிய ஆவின் பால் பொருட்களையும் முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். இந்த புதிய பால் பொருட்களும் மக்களிடையே அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.